தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சீரான குடிநீர் விநியோகம் இல்லாமல் அவதி திருவில்லிபுத்தூர் நகராட்சி நிர்வாகம் மீது மக்கள் அதிருப்தி

13 May 2026, 12:12 am
சீரான குடிநீர் விநியோகம் இல்லாமல் அவதி திருவில்லிபுத்தூர் நகராட்சி நிர்வாகம் மீது மக்கள் அதிருப்தி

சீரான குடிநீர் விநியோகம் இல்லாமல் அவதி திருவில்லிபுத்தூர் நகராட்சி நிர்வாகம் மீது மக்கள் அதிருப்தி

திருவில்லிபுத்தூர், மே 12- திருவில்லிபுத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சீரான குடிநீர் விநியோ கம் இல்லாததால் பொதுமக்கள் கடும் அவ திக்குள்ளாகி வருகின்றனர்.

திருவில்லிபுத்தூர் நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன.

இப்பகுதி களுக்கு செண்பகத்தோப்பு அருகே உள்ள பேயனாற்றுப் படுகையில் அமைக்கப் பட்டுள்ள ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் பெரிய கிணறுகள் மூலம் குடிநீர் எடுக்கப் பட்டு விநியோகம் செய்யப்பட்டு வரு கிறது.

மேலும், நீராதார பற்றாக்குறையை சமா ளிக்க பல ஆண்டுகளுக்கு முன்பு தாமிர பரணி கூட்டு குடிநீர் திட்டமும் செயல் படுத்தப்பட்டது.

இந்த திட்டத்தின் மூலம் தின மும் 58 லட்சம் லிட்டர் குடிநீர் கிடைக்க வேண்டிய நிலையில், நிர்வாக குறைபாடு கள் காரணமாக குறைந்த அளவிலேயே தண்ணீர் வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதனுடன், பேயனாற்றுப் படுகை யிலும் நீர்வரத்து குறைந்துள்ளதால், தற்போது 15 முதல் 20 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகம் நடை பெறுவதாக கூறப்படுகிறது.

கோடை வெயில் தீவிரமடைந்துள்ள நிலையில், பெண்கள், முதியவர்கள், பொது மக்கள் குடிநீருக்காக பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த பிரச்சனை குறித்து பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் பலமுறை நகராட்சி ஆணையாளர் மற்றும் குடிநீர் விநியோக அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றதாகவும், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், புதிய அரசு பொறுப் பேற்றுள்ள நிலையில், தமிழக முதல்வர் விஜய் அனைத்து பகுதிகளிலும் சீரான குடிநீர் விநியோகம் உறுதி செய்ய வேண் டும் என்றும், தவறும் உள்ளாட்சி நிர்வா கங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

இதையடுத்து திருவில்லிபுத்தூர் நகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து மக்களுக்கு சீரான குடிநீர் வழங்குமா என்ற எதிர்பார்ப்பு சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே எழுந்துள் ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.