முந்தய பக்கம்

திருவில்லிபுத்தூர் நகராட்சி மறுசுழற்சி மையத்தில் அதிகாரிகள் ஆய்வு

6 Oct 2026, 9:07 pm
திருவில்லிபுத்தூர் நகராட்சி மறுசுழற்சி மையத்தில் அதிகாரிகள் ஆய்வு

திருவில்லிபுத்தூர் நகராட்சி மறுசுழற்சி மையத்தில் அதிகாரிகள் ஆய்வு

திருவில்லிபுத்தூர், அக்.6-திருநெல்வேலி மண்டலத்துக்கு உட்பட்ட அனைத்து நகராட்சி ஆணையாளர்கள், மண்டல இயக்குநர் நவேந்திரன் தலைமையில் திருவில்லிபுத்தூர் நகராட்சியில் செயல்பட்டு வரும் தனியார் மறுசுழற்சி (கிரீன் ஓவில்) மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

ஆய்வின்போது நகராட்சி ஆணையாளர்கள், சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் நகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர். மறுசுழற்சி மையத்தில் மேற்கொள்ளப்படும் பணிகளை பார்வையிட்ட மண்டல இயக்குநர் நவேந்திரன், இதுபோன்ற மறுசுழற்சி நடவடிக்கைகளை அனைத்து நகராட்சிகளிலும் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

நிகழ்ச்சியில் திருவில்லிபுத்தூர் நகராட்சி நகரமைப்பு அலுவலர் வெங்கடேசன், சுகாதார அலுவலர் கந்தசாமி, சுகாதார ஆய்வாளர்கள் சங்கரன், முனிசெல் வம், கிரீன் ஓவில் நிறுவனத்தைச் சேர்ந்த சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram