தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வீட்டு வாசல்களை விட உயரமாக கட்டப்பட்ட வாறுகால் எம்எல்ஏ, நகராட்சி ஆணையாளர் ஆய்வு

6 Jun 2026, 10:22 pm
வீட்டு வாசல்களை விட உயரமாக கட்டப்பட்ட வாறுகால் எம்எல்ஏ, நகராட்சி ஆணையாளர் ஆய்வு

வீட்டு வாசல்களை விட உயரமாக கட்டப்பட்ட வாறுகால் எம்எல்ஏ, நகராட்சி ஆணையாளர் ஆய்வு

வீட்டு வாசல்களை விட உயரமாக கட்டப்பட்ட வாறுகால் எம்எல்ஏ, நகராட்சி ஆணையாளர் ஆய்வு திருவில்லிபுத்தூர், ஜூன் 6- திருவில்லிபுத்தூர் நக ராட்சிக்கு உட்பட்ட 33-வது வார்டின் விரிவாக்கப் பகுதியான தன்யா நகரில், வீடுகளின் வாசற்படிகளை விட உயரமாக கட்டப்பட்ட வாறு காலால் பொதுமக்கள் கடும் அவ திக்குள்ளாகியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இதையடுத்து சட்ட மன்ற உறுப்பினர் கார்த்திக் மற்றும் நகராட்சி ஆணையாளர் குமார் ஆகியோர் சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

தன்யா நகர் பகுதியில் உள்ள பாரதிநகர் 3-வது தெருவில் ஏரா ளமான குடியிருப்புகள் உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நக ராட்சி நிர்வாகத்தின் சார்பில் அடிப் படை வசதித் திட்டத்தின் கீழ் வாறு கால் அமைக்கும் பணி மேற்கொள் ளப்பட்டது.

அப்போது, வாறுகால் உயரம் குறித்து பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன், வீடு களின் வாசல்களை விட உயர மாக அமைக்கக் கூடாது என கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த பிரச்சனை குறித்து பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக் கப்படவில்லை என கூறப்படு கிறது. இந்நிலையில், தன்யா நகர் குடியிருப்போர் நலச்சங்கம் மற்றும் அப்பகுதி மக்கள் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக்கிடம் மனு அளித்தனர்.

அதன்பேரில், சனிக்கிழமை காலை சம்பவ இடத்திற்கு வந்த சட்டமன்ற உறுப்பினர், வாறு காலை நேரில் பார்வையிட்டு பொது மக்களிடம் குறைகளை கேட்ட றிந்தார். தொடர்ந்து, நகராட்சி ஆணையாளர் குமார், குடிநீர் விநியோக மேற்பார்வையாளர் ஜெயராஜ், சுகாதார அலுவலர் கந்தசாமி உள்ளிட்ட அதிகாரிகளை சம்பவ இடத்திற்கு வரவழைத்து ஆய்வு நடத்தினார். அப்போது, பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை அதி காரிகளிடம் முன்வைத்தனர்.

தெரு வின் இருபுறங்களிலும் வாசற்படி களை விட உயரமாக அமைக்கப் பட்டுள்ள வாறுகால்களை முழுமை யாக அகற்றிவிட்டு, முறையான சாலை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என வலியுறுத்தினர்.

மக்களின் கோரிக்கையை ஆதரித்து பேசிய சட்டமன்ற உறுப்பி னர், வாறுகால் பணியில் உள்ள குறைபாடுகள் குறித்து அதிகாரி களிடம் எடுத்துரைத்ததுடன், பணிகள் தொடர்பாக உரிய நட வடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தி னார்.

ஆய்வின் போது, பாரதி நகர் 1, 2, 3-வது தெருக்கள் மற்றும் சாய்பாபா நகர் உள்ளிட்ட பகுதி களில் குடிநீர் விநியோகம் முறை யாக நடைபெறவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

குறிப்பாக, பாரதி நகர் 1-வது தெரு வில் பல வீடுகளுக்கு கடந்த ஒன் றரை ஆண்டுகளாக குடிநீர் விநி யோகம் கிடைக்கவில்லை என புகார் தெரிவித்தனர். மேலும், வாறுகால் பணி மேற்கொள்ளப்பட்டபோது தங்க ளது எதிர்ப்பை தெளிவாக தெரி வித்திருந்தும் நகராட்சி நிர்வாகம் அதை ஏற்கவில்லை என்றும், இத னால் பல குடும்பங்கள் கடந்த 4முதல் ஐந்து மாதங்களாக கடும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாக வும் தெரிவித்தனர். இந்த வாறுகால் பணிக்காக சுமார் ரூ.65 லட்சம் மதிப்பில் ஒப்பந்தம் வழங்கப்பட்டதாக தக வல் வெளியாகியுள்ளது.

பொது மக்களின் கருத்துக்களை கருத்தில் கொண்டு பணிகள் மேற்கொள்ளப் பட்டிருந்தால் இந்த செலவு வீணாகி யிருக்காது என்றும், ஏற்பட்டுள்ள இழப்புக்கு பொறுப்பான அதிகாரி கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.

ஆய்வின்போது தன்யா நகர் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகி கள் ராமானுஜம், மாரியப்பன், மகேஸ்வரி, முன்னாள் கவுன்சிலர் மகேஸ்வரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.