தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

100 நாள் வேலைத்திட்டத்தில் குறைவான ஊதியம் வழங்குவதா? திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட தொழிலாளர்கள்

6 Oct 2026, 9:05 pm
100 நாள் வேலைத்திட்டத்தில் குறைவான ஊதியம் வழங்குவதா? திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட தொழிலாளர்கள்

100 நாள் வேலைத்திட்டத்தில் குறைவான ஊதியம் வழங்குவதா? திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட தொழிலாளர்கள்

திருவில்லிபுத்தூர், அக்.6-திருவில்லிபுத்தூர் ஒன்றியம் பி.ராமச்சந்திராபுரம் ஊராட்சியில் 100 நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றி வரும் பழைய செந்நெல்குளம், புதிய செந்நெல்குளம், ராமச்சந்திராபுரம் கிராமங்களைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு குறைவான ஊதியம் வழங் கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.தொழிலாளர்கள் வேலை செய்த நாட்களுக்கான ஊதியம் முறையாக வழங்கப்படவில்லை என்றும், தற் போது 20 நாட்களுக்கான ஊதியமாகரூ.3,330 மட்டுமே வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன்படி, நாளொன் றுக்கு ரூ.166.50 மட்டுமே வழங்கப் பட்டுள்ளதாகவும், வழக்கமாக ரூ.250 முதல் ரூ.300 வரை ஊதியம் வழங்கப் படும் நிலையில், தற்போது குறைவாக வழங்கப்பட்டுள்ளதாகவும் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

மேலும், மாற்றுத் திறனாளி தொழிலாளர்களுக்கு முழுமையான ஊதியம் வழங்கப்படவில்லை என்றும், அவர்களை மாற்றுத்திறனாளிகளுக் கான தனிப்பட்ட பிரிவில் பதிவு செய்யாமல்என்.எம்.ஆர். கணக்கில் பதிவு செய்துள்ளதாகவும் புகார் தெரிவிக் கப்பட்டது. ஒன்றிய மேற்பார்வையாளர் தொழிலாளர்களிடம் கடுமையாக நடந்து கொள்வதாகவும் கூறப் பட்டது.

இதையடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கவனத்துக்கு வந்த புகாரைத் தொடர்ந்து, செவ்வாய்க் கிழமை தொழிலாளர்களைத் திரட்டி திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியஅலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.தகவலறிந்து வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் ஹேமமாலினி, தொழிலாளர்களை நேரில் சந்தித்து கோரிக்கைகளைக் கேட்டறிந்தார். இதுபோன்ற குறைபாடுகள் இனிமேல் நடைபெறாது என உறுதியளித்தார். இதையடுத்து, அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப் பட்டதைத் தொடர்ந்து போராட்டம் தற் காலிகமாகக் கைவிடப்பட்டது.போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் எஸ்.வி.சசிகுமார், மாவட்டக் குழு உறுப்பினர் சி.ஜோதிலட்சுமி, பழைய செந்நெல்குளத்தைச் சேர்ந்த விஜயா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.