வாசிப்பை நேசிப்போம் திருவில்லிபுத்தூரில் இலக்கிய விழா
24 May 2026, 11:00 pm
<p><strong>வாசிப்பை நேசிப்போம் திருவில்லிபுத்தூரில் இலக்கிய விழா</strong></p><p>திருவில்லிபுத்தூர், மே 24- வாசிப்பு பழக்கத்தை ஊக்கு விக்கும் நோக்கிலும், இலக்கிய ரச னையை வளர்க்கும் வகையிலும் திருவில்லிபுத்தூர் பென்னிங்டன் நூலகக் கலையரங்கில் “வாசிப்பை நேசிப்போம்” என்ற இலக்கிய நிகழ்ச்சி நடைபெற்றது. நூலகக்குழு செயலாளர் ஏ.எம். எம்.ராதா சங்கர் முன்னிலை வகித்தார். எஸ்.ரமேஷ் வரவேற்பு ரையாற்றினார். இதனைத் தொடர்ந்து, “கம்பரா மாயணம் காட்டும் நெறிமுறையும் வாழ்வியலும்” என்ற தலைப்பில் இராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் வி.கலாவதி சிறப்புரையாற்றினார். தொடர்ந்து கவிஞர் ஆதிக்கு பாரா ட்டு விழா நடத்தப்பட்டது. இலக்கி யப் பெருமன்றத் தலைவர் கோதை யூர் மணியன் வரவேற்றார். பின்னர் கவிதை நூல்களை விமர்சித்து சிவநேசன், திரைப்படப் பாடலாசிரியர் சுரா, அபூர்வன் ராஜா, எஸ்.ரமேஷ், மணிமேகலை ஆகி யோர் கருத்துரை வழங்கினர். “பாட்டுக்கொரு புலவன் பாரதி” என்ற தலைப்பில் பட்டிமன்ற நாய கன் “தமிழ்ச் செம்மல்” சிவகாசி கா.காளியப்பன் உரையாற்றினார். நிறைவாக கவிஞர் ஆதி ஏற்பு ரையாற்றினார். பட்டிமன்ற பேச்சா ளர் எத்திராஜ் நன்றி கூறினார்.</p>
