கபடி வீரர்களுக்கு பாராட்டு விழா
8 Oct 2026, 9:27 pm

கபடி வீரர்களுக்கு பாராட்டு விழா

திருவில்லிபுத்தூர், அக்.8-ரோட்டரி கிளப் ஆப் திருவில்லிபுத்தூர் டவுன் மற்றும் விருதுநகர் மாவட்ட அமெச் சூர் கபடி கழகம் இணைந்து நடத்திய 20 வயதுக்கு உட் பட்ட மாவட்ட கபாடி அணியினருக்கான பயிற்சி முகாம் நிறைவு விழா மற்றும் மாநிலப் போட்டிக்கு செல்லும் வீரர் களுக்கான பாராட்டு விழா பெருமாள்பட்டி நாடார் உறவின்முறை வளாகத்தில் நடைபெற்றது.

விழாவுக்கு பெருமாள் பட்டி நாடார் உறவின்முறை தலைவர் மற்றும் நிர்வாகிகள் தலைமை வகித்தனர். மாவட்ட அமெச்சூர் கபாடி கழகத் தலைவர் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். ரோட்டரி டவுன் சங்க முன் னாள் துணை ஆளுநர் முத்துராமலிங்ககுமார் வரவேற் றார். தலைவர் சிவக்குமார் வாழ்த்திப் பேசினார்.ரோட்டரி மாவட்டம் 3212-ன் 2029–30-ஆம் ஆண் டுக்கான ஆளுநர் மயில் டி.பாலசுப்பிரமணியம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாநிலப் போட்டிக்கு தேர் வான வீரர்களை வாழ்த்தி, தேவையான விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க உறுப்பினர்கள் பாலசுப்பிரமணியம், சிவக்குமார், ஜெயராஜ், சின்னத்தம்பி, செல்வகுமார், முத்துவேல் ராஜா, கார்த்திக்தீபன் மற் றும் பயிற்சியாளர்கள் மாடசாமி, முத்துராஜ் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். செயலாளர் சரவணக்குமார் நன்றி கூறினார்.