திருவில்லிபுத்தூரில் ஜமாபந்தி
12 Jun 2026, 9:39 pm
<p><strong>திருவில்லிபுத்தூரில் ஜமாபந்தி</strong></p><p> திருவல்லிபுத்தூர், ஜூன் 12- விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் குறுவட்டத்திற்குட்பட்ட 9 கிராமங்களுக்கு பசலி ஆண்டு- 1435 க்கான (ஜமாபந்தி) வருவாய் தீர்வாயம் வருவாய் தீர்வாய அலுவலர்/ சிவகாசி உதவி ஆட்சியர் முகமது இர்ஃபான் தலைமையில் திருவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது. இதில் பொதுமக்களிடம் இருந்து 43 மனுக்கள் பெறப்பட்டன. 8 நபர்களுக்கு இ பட்டா சிவகாசி உதவி ஆட்சியரால் வழங்கப்பட்டது.</p>
