அரசு கல்லூரியில் பண்பாட்டு மரபு கண்காட்சி
24 Jul 2026, 10:00 pm
<p><strong>அரசு கல்லூரியில் பண்பாட்டு மரபு கண்காட்சி</strong> </p><p> திருவல்லிபுத்தூர், ஜூலை 24 விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமையன்று தமிழ்த் துறை சார்பில் தமிழர் பண்பாட்டு மரபு கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியை கல்லூரியின் முதல்வர் சுப சரவணன் திறந்து வைத்தார். கண்காட்சியில் தமிழர்கள் பழங்கால உணவு பொருட்கள், விளையாட்டுக் கருவிகள், போருக்கு பயன்படுத்திய ஆயுதங்கள் ,உடல் நலத்திற்கு நன்மை பயக்கக்கூடிய சத்தான உணவு வகைகள், பழங்கால நாணயங்கள்,கல்வெட்டுச் செய்திகள் உள்ளிட்டவைகள் இடம் பெற்றிருந்தன. முன்னதாக தமிழர்களின் வாழ்வியலை விளக்குகிற வகையில் குறும்படம் மாணவர்கள் மத்தியில் திரையிடப்பட்டது நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழ்த்துறை தலைவர் ரவி தலைமையில் பேராசிரியர்கள் செய்தனர். </p>
