திருவில்லிபுத்தூர் அரசு கலைக் கல்லூரியில் ஆசிரியர் தின விழா
24 Sept 2026, 8:41 pm

திருவில்லிபுத்தூர் அரசு கலைக் கல்லூரியில் ஆசிரியர் தின விழா

திருவில்லிபுத்தூர், செப்.24-திருவில்லிபுத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆசிரியர் தின விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் சுமதி தலைமை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக அருப்புக்கோட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் கிளிராஜ் கலந்து கொண்டு, ‘உனக்கான இடம் எங்கே?’ என்ற தலைப்பில் பேசினார்.

கணினி அறிவியல் துறைத் தலைவர் சுப.சரவணன் வரவேற்றார். கணிதவியல் துறைத் தலைவர் அமுதா சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. கணினி அறிவியல் துறை இணைப் பேராசிரியர் ரவி நன்றி கூறினார்.