ஆக்கிரமிப்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு நெல் கொள்முதல் நிலையம்
21 Feb 2026, 3:26 pm

ஆக்கிரமிப்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு நெல் கொள்முதல் நிலையம்

நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஸ்ரீவில்லிபுத்தூர், பிப்.21- தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம் சார்பில் செயல் படும் நேரடி நெல் கொள்முதல் நிலையத் தின் மோசமான நிலைமை குறித்து விவசாயி களும் சமூக ஆர்வலர்களும் கவலை தெரி வித்தனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரின் தெற்கே மடவார் வளாகம் பகுதியில் அமைந்துள்ள இந்த கொள்முதல் மையம் சுமார் ஐந்தரை ஏக்கர் பரப்பளவில் பொதுப் பணித்துறைக்கு சொந்தமான நிலத்தில் இயங்கி வருகிறது. அலுவலகக் கட்டி டத்திற்கு வெளியே மின்விளக்கு வசதி இல்லாததால், இரவு நேரங்களில் பாம்பு, தேள் உள்ளிட்ட விஷப்பூச்சிகள் அதிகம் காணப்படுவதாக கூறப்படுகிறது. மேலும், வளாகத்தின் ஒரு பகுதி ஆக்கி ரமிக்கப்பட்டு வீடுகள், மாட்டுக் கொட்டகை கள், கோயில் மற்றும் சிறு கடைகள் கட்டப் பட்டுள்ளதாகவும், லாரிகள் நிறுத்தும் இட மாகவும் பயன்படுத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு உள் ளூர் நிர்வாக அமைப்புகள் கட்டிட அனுமதி வழங்கியதா என்ற கேள்வியும் எழுந்துள் ளது. முக்கியமாக, விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை பாதுகாப்பாக சேமிக்க கிட்டங்கி வசதி இல்லாததால், நெல்லை திறந்த வெளியில் குவித்து வைக்க வேண் டிய நிலை உள்ளது. மழை பெய்தால் நெல் நனைந்து சேதமடையும் சூழல் உள்ளது. இதனால், உடனடியாக உரிய பாது காப்பு வசதிகள், களஞ்சியம், மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி, ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வா கம் தலையிட வேண்டும் என விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.