இரண்டாவது நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படுமா?
8 Jun 2026, 9:38 pm

இரண்டாவது நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படுமா?

திருவில்லிபுத்தூரில் விவசாயிகள் எதிர்பார்ப்பு

திருவில்லிபுத்தூர், ஜூன் 8- திருவில்லிபுத்தூரில் தற்போது ஒரே ஒரு நேரடி நெல் கொள்முதல் நிலையம் மட்டுமே செயல்பட்டு வரும் நிலையில், விவசாயி களின் எண்ணிக்கையும் நெல் உற்பத்தியும் அதிகரித்துள்ளதால் கூடுதலாக இரண்டா வது நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழ கத்தின் சார்பில் செயல்பட்டு வரும் இந்த கொள்முதல் மையத்தை, பெரியகுளம் கண் மாய், வன்னியம்பட்டி, வைத்திலிங்கபுரம், பிள்ளையார்குளம் கண்மாய், அச்சம் தவிர்த்தான் கண்மாய், வடமலைக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பாசனப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் பயன்படுத்தி வரு கின்றனர்.

கடந்த 2024 ஆம் ஆண்டு வரை நெல் கொள்முதல் அளவு குறைவாக இருந்த நிலை யில், 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மட்டும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

விவசாயிகள் அதிக அள வில் நெல் சாகுபடியில் ஈடுபட்டதன் விளை வாக, ஒரே கொள்முதல் மையத்தில் அதிக ளவு நெல் மூட்டைகள் குவிந்ததால் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டதாக விவசாயிகள் தெரி வித்துள்ளனர். த

ற்போது அறுவடை முழுமையாக தொடங்காத நிலையிலும், இந்த ஆண்டில் சுமார் 80 ஆயிரம் நெல் மூட்டைகள் வரை கொள்முதல் மையத்திற்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் ஒரே ஒரு கொள்முதல் நிலையம் போதுமானதாக இருக்காது என விவசாயிகள் கருதுகின்ற னர். போதிய இடவசதி இல்லாத காரணத் தால், கொள்முதல் செய்யப்படாத நெல் மூட்டைகள் கதிரடிக்கும் தளங்களில் குவிக்கப்பட்டு தார்பாய்களால் மூடப்படும் நிலை உள்ளது.

மேலும் பாதுகாப்பு வசதிகள் குறைவாக இருப்பதால், விவசாயிகள் இரவு முழுவதும் தங்களது நெல் மூட்டைகளுக்கு காவல் காக்க வேண்டிய சூழல் உருவாகி யுள்ளதாக கூறப்படுகிறது. திறந்தவெளி பகு தியாக இருப்பதால் வெயில் மற்றும் குளிரை யும் பொருட்படுத்தாமல் காத்திருக்க வேண் டிய நிலையும் உள்ளது.

எனவே, வரவிருக்கும் அறுவடை கால த்தை முன்னிட்டு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகமும் மாவட்ட நிர்வாகமும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து, திருவில்லிபுத்தூரில் கூடுதலாக இரண்டாவது நெல் கொள்முதல் நிலை யத்தை திறக்க வேண்டும் என்று விவசாயி கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இரண்டாவது கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டால், நெல் கொள்முதல் பணி கள் விரைவாக நடைபெறு

வதுடன், விவசாயி கள் எதிர்கொள்ளும் சேமிப்பு, பாதுகாப்பு மற்றும் காத்திருப்பு சிரமங்களும் வெகுவாக குறையும் என அவர்கள் நம்பிக்கை தெரி வித்துள்ளனர்.