முந்தய பக்கம்

பஞ்சு மில்லில் தீ விபத்து

12 Jun 2026, 9:39 pm
பஞ்சு மில்லில் தீ விபத்து
<p><strong>பஞ்சு மில்லில் தீ விபத்து </strong></p><p>திருவில்லிபுத்தூர் ,ஜூன் 12- விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் வட்டம் வன்னியம்பட்டி அருகே எ. முத்துலிங்காபுரம் கிரா மத்தில் கிருஷ்ணா இண்டஸ்ட்ரீஸ் கழிவு பஞ்சு மில் செயல் பட்டு வருகிறது. இந்த மில்லில் ஒரு அறையில் ஏராள மான கழிவுப்பஞ்சுகள் குவித்து வைக்கப்பட்டிருந்தன. வெள்ளிக்கிழமையன்று மதியம் திடீரென கழிவு பஞ்சுகள் குவித்து வைக்கப்பட்டிருந்த அறையில் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து திருவில்லிபுத்தூர் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் சே.ராஜ்குமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர் . இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram