தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தரமான நூலை உடனடியாக வழங்க வேண்டும் திருவில்லிபுத்தூரில் சிஐடியு நெசவாளர்கள் ஆர்ப்பாட்டம்

4 Jul 2026, 9:31 pm
தரமான நூலை உடனடியாக வழங்க வேண்டும் திருவில்லிபுத்தூரில் சிஐடியு நெசவாளர்கள் ஆர்ப்பாட்டம்
<p><strong>தரமான நூலை உடனடியாக வழங்க வேண்டும் திருவில்லிபுத்தூரில் சிஐடியு நெசவாளர்கள் ஆர்ப்பாட்டம்</strong></p><p>திருவில்லிபுத்தூர், ஜூலை 4- கைத்தறி நெசவாளர்களுக்கு உடனடியாக தரமான நூல் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, சிஐடியு சார்பில் திருவில்லிபுத்தூ ரில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவில்லிபுத்தூர் நகரில் செயல்பட்டு வரும் 7 கைத்தறி நெச வாளர் கூட்டுறவு சங்கங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெசவா ளர்கள் உறுப்பினர்களாக உள்ள னர். இவர்கள் கூட்டுறவு சங்கங்கள் வழங்கும் நூலைப் பயன்படுத்தி சேலை, வேட்டி, துண்டு உள்ளிட்ட கைத்தறி பொருட்களை தயா ரித்து வழங்கி வருகின்றனர். முழு மையாக கூட்டுறவு சங்கங்க ளையே நம்பியுள்ள நெசவாளர் களுக்கு, ஒரு முறை நூல் வழங் கப்பட்ட பிறகு மீண்டும் நூல் கிடை க்க சுமார் ஒரு மாதம் ஆகிறது. இதனால் அந்தக் காலகட்டத்தில் வேலை இன்றி வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறப்படு கிறது. மேலும், வழங்கப்படும் நூலின் தரமும் திருப்திகரமாக இல்லை என்றும், கடந்த இரண்டு மாதங்க ளாக கூட்டுறவு சங்கங்கள் நூல் வழங்காததால் நெசவாளர்கள் கடு மையான பொருளாதார நெருக்கடி யை சந்தித்து வருவதாகவும், பல குடும்பங்கள் ஒரு வேளை உணவு டன் காலத்தைக் கழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், குழந்தை களை பள்ளிக்கு அனுப்புவதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரி விக்கப்பட்டது. இந்த நிலையில், திருவில்லிபுத் தூர் பழைய கனரா வங்கி அருகே உள்ள ஆண்டாள் நெசவாளர் கூட் டுறவு சங்க அலுவலகம் முன்பு சிஐடியு கைத்தறி நெசவாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் பிச் சைக்கனி தலைமை வகித்தார். கைத்தறி சங்க மாவட்டப் பொருளா ளர் தனலட்சுமி மற்றும் விசைத்தறி சங்க நிர்வாகி முருகேசன் முன் னிலை வகித்தனர். சிஐடியு கைத்தறி நெசவாளர் சங்க மாவட்டச் செயலாளர் ராமச் சந்திரன் ஆர்ப்பாட்டத்தை தொட ங்கி வைத்து பேசினார். சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.மகா லட்சுமி நிறைவுரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு சாலைப் போக்குவரத்து தொழிலா ளர்கள் சங்கம் (சிஐடியு) மாவட்டச் செயலாளர் திருமலை, சிஐடியு மாவட்டக் குழு உறுப்பினர் வீர சானந்தம், மாதர் சங்க மாவட்ட நிர்வாகி ரேணுகாதேவி, சிறு பான்மை மக்கள் நலக் குழு மாவட் டச் செயலாளர் மரியடேவிட், மின் வாரிய ஓய்வுபெற்றோர் நலச் சங்க மாவட்டச் செயலாளர் கணேசன், சிபிஎம் நகரச் செயலாளர் ஜெயக் குமார், ஒன்றியச் செயலாளர் சசி குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர். மேலும், மாரியம்மன் கோவில் தெரு, ஊரணிப்பட்டி தெரு, மாயாண்டிப்பட்டி தெரு, கீழப்பட்டி தெரு, காந்தி நகர், முதலியார்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட நெசவாளர் கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.