திருவில்லிபுத்தூரில் கோவில் அருகே தொடர்ந்து செயல்படும் டாஸ்மாக் கடைகள் அரசு உத்தரவை அமல்படுத்த பொதுமக்கள் கோரிக்கை
20 Jun 2026, 11:14 pm
<p><strong>திருவில்லிபுத்தூரில் கோவில் அருகே தொடர்ந்து செயல்படும் டாஸ்மாக் கடைகள் அரசு உத்தரவை அமல்படுத்த பொதுமக்கள் கோரிக்கை</strong></p><p>திருவில்லிபுத்தூர், ஜூன் 20- திருவில்லிபுத்தூரில் பேருந்து நிலை யம் மற்றும் ஆண்டாள் கோவில் அருகே செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகள் குறித்து சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். பேருந்து நிலையம், மருத்துவமனை, கோவில் மற்றும் கல்வி நிறுவனங்கள் அருகே உள்ள மதுபானக் கடைகள் மூடப் பட வேண்டும் என்ற அரசின் அறிவிப்பின் அடிப்படையில் பல்வேறு பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும், திருவில்லிபுத்தூ ரில் சில டாஸ்மாக் கடைகள் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக உள்ளூர் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். குறிப்பாக, பேருந்து நிலையம் மற்றும் ஆண்டாள் கோவில் அருகே இயங்கி வரும் இரண்டு டாஸ்மாக் கடைகள் அரசு அறி விப்பின் வரம்பிற்குள் வருகின்றனவா என் பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்தக் கடைகள் செயல்படுவதால் அப்பகுதியில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை கள் ஏற்படுவதுடன், பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள், வேலைக்குச் செல்லும் பெண் கள் உள்ளிட்டோருக்கு சிரமம் ஏற்படுவ தாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின் றனர். மேலும், அரசு வெளியிட்டதாக கூறப் படும் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளின் பட்டி யலில் திருவில்லிபுத்தூரில் உள்ள இந்த இரண்டு கடைகளும் இடம்பெற்றுள்ள னவா என்பது குறித்து தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேநேரத்தில், இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் அதி காரப்பூர்வ விளக்கம் எதுவும் வெளி யாகவில்லை. எனவே, பொதுமக்களின் சந்தே கங்களுக்கு உரிய விளக்கம் அளித்து, தேவையான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகமும் சம்பந்தப்பட்ட துறைகளும் மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வ லர்கள் வலியுறுத்தியுள்ளனர்.</p>
