தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூர திருவிழா தேரோட்டம்அமைச்சர்கள் ச.கீர்த்தனா, கு.ஜெகதீஸ்வரி துவக்கி வைத்தனர்

14 Aug 2026, 9:43 pm
திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்  ஆடிப்பூர திருவிழா தேரோட்டம்அமைச்சர்கள் ச.கீர்த்தனா, கு.ஜெகதீஸ்வரி துவக்கி வைத்தனர்

திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூர திருவிழா தேரோட்டம்அமைச்சர்கள் ச.கீர்த்தனா, கு.ஜெகதீஸ்வரி துவக்கி வைத்தனர்

திருவில்லிபுத்தூர், ஆக.14-விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் நாச்சியார் (ஆண்டாள்) கோவில்ஆடிப்பூரத் திருவிழாவைமுன்னிட்டு வெள்ளிக்கிழமையன்று தேரோட்டம் நடைபெற்றது. தமிழக தொழில் முதலீட்டு, ஊக்குவிப்பு - வர்த்தகத்துறை அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா, தமிழக சமூக நலன்- மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கு.ஜெகதீஸ்வரி ஆகியோர் தேரோட்டத்தை துவக்கி வைத்தனர்.

மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா தலைமை வகித்தார். திருவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அ.கார்த்திக் முன்னிலை வகித்தார். திருத்தேரானது கோவிலை சுற்றியுள்ள நான்கு ரதவீதிகளிலும் உலா வந்தது.ஆடிப்பூரத் தேரோட்ட விழாவிற்கான முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் செய்திருந்தன.

மதுரை சரக டிஐஜி அபிநவ் குமார், திருநெல்வேலி சரக டிஐஜி திருநாவுக்கரசு ஆகியோர் தலைமையில் விருதுநகர் மாவட்டகாவல் கண்காணிப்பாளர் கவுதம் கோயல், திருநெல்வேலி மாநகர துணை ஆணையர் சரவணன் முன்னிலையில் தென் மாவட்டங்்களைச் சேர்ந்த காவல் ஆய்வாளர்கள் ,சார்பு ஆய்வாளர்கள், காவல் ஆளிநர்கள் உள்ளிட்ட காவல்துறையின்மூலம் ேரோட்ட நிகழ்ச்சியில் பங்கேற்கும் பொதுமக்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. குற்றங்களைத்தடுக்க ஆங்காங்கே கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தி கண்காணிக்கப்பட்டது.

கூட்ட நெரிசலை தவிர்க்க போக்குவரத்தினை ஒழுங்குபடுத்தி மாற்றுப்்பாதை ஏற்படுத்தப்பட்டிருந்தது. வருகின்ற பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்குத் தேவையான குடிநீர் வசதி மற்றும் சுகாதார வசதிகள் நகராட்சி நிர்வாகத்தால் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தன. நகர நிர்வாகத்தால் செய்யப்பட்ட அடிப்படை வசதிகள் குறித்து பக்தர்களும் பொதுமக்களும் கூறும்போது, கடந்த ஆண்டு விட மிகவும் குறைவான வசதிகள் செய்யப்பட்டிருந்தன.மிகவும்சிரமப்பட்டோம் என்று கூறினர்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ரா.ஆனந்தி, சிவகாசிசார் ஆட்சியர் முகமது இர்பான், இணை ஆணையர் .செ.மாரியப்பன், தக்கார்/உதவி ஆணையர்.மு.நாகராஜன், திருக்கோவில் செயல் அலுவலர் சௌ.சக்கரையம்மாள், டிஎஸ்பி பாலசுந்தரம் உட்படஅரசு அலுவலர்கள், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.