தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கட்டி முடித்து ஓராண்டாகியும் திறக்கப்படாத வேளாண் விற்பனை மையம்

13 Jun 2026, 10:10 pm
கட்டி முடித்து ஓராண்டாகியும்  திறக்கப்படாத வேளாண் விற்பனை மையம்
<p><strong>கட்டி முடித்து ஓராண்டாகியும் திறக்கப்படாத வேளாண் விற்பனை மையம்</strong></p><p>விவசாயிகள் அதிருப்தி ஸ்ரீவில்லிபுத்தூர், ஜூன் 13- தமிழ்நாடு அரசு வேளாண் விற்பனைத் துறையின் நிதி உதவியுடன் கட்டி முடிக்கப் பட்ட வேளாண் விற்பனைக் கழகக் கட்டிடம், மின் இணைப்பு வழங்கப்படாத காரணத்தால் ஓராண்டுக்கும் மேலாக திறக்கப்படாமல் இருப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா விற்கு உட்பட்ட அச்சம்தவி ர்த்தான் கிராமத்தில் விவ சாயிகளின் பயன்பாட்டிற் காக வேளாண் விற்பனைக் கழகக் கட்டிடம் கட்டப்பட் டது. இக்கட்டிடத்தில் திறந்த வெளி உலர் களம் மற்றும் தானியக் கிட்டங்கி அமைக் கப்பட்டுள்ளன. இதன் மூலம் விவசாயிகள் தாங்கள் விளை விக்கும் தானியங்களை காய வைப்பதற்கும், இருப்பு வைப்பதற்கும் வசதி ஏற் படுத்தப்பட்டுள்ளது. ஆனால், கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டு கடந்தும் மின் இணைப்பு வழங்கப்படாததால், வேளாண் மையம் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் விவசாயிகள் அதன் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து திருவில்லி புத்தூர் ஊராட்சி ஒன்றிய பொறியாளர் ஸ்வீட்டியை தொடர்பு கொள்ள பலமுறை முயற்சித்தபோதும், அவர் தொலைபேசி அழைப்பை ஏற்கவில்லை என தெரி விக்கப்பட்டுள்ளது. மேலும், அலுவலகத்திற்கு நேரில் சென்றபோதும் அவர் பணி யில் இல்லை என கூறப்படு கிறது. இதுகுறித்து விளக்கம் அளித்த வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊரா ட்சி) சிவகுமார், “வேளாண் விற்பனை மைய கட்டிடம் எங்களிடம் ஒப்படைக்கப் பட்டு பத்து நாட்கள்தான் ஆகின்றன. இருப்பினும், கட்டிடத்திற்கு மின் இணை ப்பு பெறுவதற்காக விண் ணப்பம் அளிக்கப்பட்டுள் ளது. விரைவில் மின் இணை ப்பு கிடைக்கும்” என்றார். மறுபுறம், வேளாண் விற் பனை மைய அதிகாரிகள், “கட்டிடம் முறையாக ஊரா ட்சி ஒன்றிய நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. மின் இணைப்பு பெறுவதற் கான நடவடிக்கைகளை ஊராட்சி ஒன்றிய நிர்வா கமே மேற்கொள்ள வேண் டும்” என தெரிவித்தனர். இரு துறை அதிகாரி களும் பொறுப்பை ஒருவர் மீது ஒருவர் சுமத்திக் கொண் டிருப்பதால், விவசாயி களின் நலன் பாதிக்கப்பட் டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, ஓராண்டாக பயன்பாட்டிற்கு வராமல் உள்ள வேளாண் விற்பனை மையத்திற்கு உடனடியாக மின் இணைப்பு வழங்கி திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தாம தத்திற்கு காரணமான அதி காரிகள் மீது உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என் றும் விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.