தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருவைகுண்டம் இளம்பெண்ணுக்கு கும்பல் பாலியல் வன்கொடுமை!

8 Jun 2026, 9:01 pm
திருவைகுண்டம் இளம்பெண்ணுக்கு  கும்பல் பாலியல் வன்கொடுமை!

திருவைகுண்டம் இளம்பெண்ணுக்கு கும்பல் பாலியல் வன்கொடுமை!

மார்க்சிஸ்ட் கட்சி கடும் கண்டனம்!

சென்னை, ஜூன் 8 - திருவைகுண்டம் இளம்பெண் கும்பல் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது

இதுதொடர்பாக, கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப் பட்டிருப்பதாவது:

தவெக நிர்வாகிகளின் படுபாதகச் செயல்

தமிழக வெற்றிக் கழகத்தைச் சார்ந்த திருவைகுண்டம் பகுதி நிர்வா கிகளான பாலமுருகன் மற்றும் ஜெயபால் ஆகியோர், திருவை குண்டம் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி. சரவணன் பெயரைச் சொல்லி வேலை வாங்கித் தருவதாக இளம்பெண்ணை காரில் கடத்திச் சென்று குளிர்பா னத்தில் மயக்க மருந்து கொடுத்து மிகக் கொடூரமான முறையில் கும்பல் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு ள்ளனர். இந்த படுபாதக செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

எம்எல்ஏ-வும் தலையிட்டு மிரட்டியதாக குற்றச்சாட்டு

மேலும், இச்சம்பவம் குறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர். இளம்பெண்ணை தொடர்பு கொண்ட சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி. சர வணன் என்பவரும் போலீசில் புகார் அளிக்கக் கூடாது என மிரட்டிய தாக பாதிக்கப்பட்ட இளம்பெண் ஊட கங்கள் வாயிலாக குற்றம்சாட்டியுள் ளார். இச்சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இவ்வழக்கில் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இருப்பினும், இந்த குற்றச்செய லில் ஈடுபட்டவர்கள் ஆளும் கட்சி பிர முகர்கள் என்பதால் எந்தவித அரசி யல் தலையீடும் இன்றி சுதந்திரமான விசாரணை நடத்திட வேண்டுமென வும், பாதிக்கப்பட்ட பெண் முன் வைத்துள்ள அனைத்து குற்றச்சாட்டுக் களும் விசாரணையின் கீழ் கொண்டு வரப்பட்டு குற்றவாளிகள் யாராக இருந் தாலும் அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகளை உறுதியாக மேற் கொள்ள வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

உரிய பாதுகாப்பும், நிவாரணமும் வழங்குக!

மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணு க்கு உரிய பாதுகாப்பும், அரசு வேலை யும், நிவாரணமும் வழங்கிட வேண்டு மெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.

அதிகாரம், பதவி, பணம் மற்றும் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி தமிழகத்தில் பெண்கள் - குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை சம்ப வங்கள் அதிகரித்துக் கொண்டே வரு கின்றன. இதனை தடுப்பதற்கு தமிழ்நாடு அரசு விரைந்து உரிய நட வடிக்கைகளை மேற்கொண்டு பெண் கள் - குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டுமெனவும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறு த்துகிறது. இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.