தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஸ்ரீவைகுண்டம் கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: முதலமைச்சர் விஜய்க்கு மாதர் சங்கம் கடிதம்!

18 Jun 2026, 4:22 pm
ஸ்ரீவைகுண்டம் கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: முதலமைச்சர் விஜய்க்கு மாதர் சங்கம் கடிதம்!

ஸ்ரீவைகுண்டம் பகுதியில் இளம்பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி, பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார உத்தரவாதத்தை உறுதி செய்ய வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாகத் தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்க்கு, சங்கத்தின் தலைவர் ஜி.பிரமிளா, பொதுச்செயலாளர் அ.ராதிகா ஆகியோர் எழுதியுள்ள கடிதத்தில், "தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் பகுதியில் இளம்பெண் ஒருவர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி அழைத்துச் செல்லப்பட்டு, கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட செய்தி தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த வழக்கில் ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் ஜெயபால் மற்றும் பாலமுருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி. சரவணன் மீதும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. எனவே, இவ்வழக்கில் முழுமையான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும். குற்றவாளிகள் யாராக இருந்தாலும், அவர்கள் எந்த அரசியல் கட்சி, பதவி அல்லது செல்வாக்கு கொண்டவர்களாக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இக்கொடூரச் செயல், பாதிக்கப்பட்ட பெண்ணின் வறுமை, வேலையின்மை மற்றும் பொருளாதார நெருக்கடியைப் பயன்படுத்தி நிகழ்த்தப்பட்ட பாலியல் சுரண்டலின் வெளிப்பாடாகும்.

மேலும், இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்டுள்ள பெண் தற்போது கடுமையான வாழ்வாதாரச் சிக்கலை எதிர்கொண்டு வருகிறார். அவரது குடும்பம் வீடு, வேலை, வருமானம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படைத் தேவைகளுக்கே போராடும் நிலையில் உள்ளது. பாலியல் வன்கொடுமையின் உடல் மற்றும் மன ரீதியான பாதிப்புகளோடு, பொருளாதார நெருக்கடியும் அவரை மிகுந்த துயரத்திற்குள்ளாக்கியுள்ளது.

எனவே, இந்த வழக்கில் தமிழக அரசு சட்ட நடவடிக்கைகளோடு மட்டும் நின்றுவிடாமல், பாதிக்கப்பட்ட பெண்ணின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் பொறுப்பையும் ஏற்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உடனடியாக உரிய தீருதவி வழங்கப்பட வேண்டும்; அவருக்கு அரசுப் பணியும், பாதுகாப்பான தங்குமிட வசதியும் ஏற்படுத்தித் தரப்பட வேண்டும்.

அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தேவையான காவல் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். வழக்கை விரைவு நீதிமன்றத்தில் விசாரித்து, குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகள் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக் குழு சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.