ஸ்ரீவைகுண்டம் வடகால் பாசனத்திற்கு தண்ணீர் கேட்டு மறியல்
29 May 2026, 11:01 pm
<p><strong>ஸ்ரீவைகுண்டம் வடகால் பாசனத்திற்கு தண்ணீர் கேட்டு மறியல் </strong></p><p>தூத்துக்குடி, மே 29 ஸ்ரீவைகுண்டம் வடகால் பாசன பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் கருகும் சூழலில் இருப்பதால் பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து ஸ்ரீவை குண்டம் அணைக்கட்டில் தேக்கி வடகால் பாசனத்திற்கு தண்ணீர் வழங்கிட வலியுறுத்தி கடந்த 20/05/26 அன்று தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் 2 நாட்களுக்குள் தண்ணீர் வழங்கப்படும் என்று ஒப்புக்கொண்டும் இதுவரை நடவடிக்கை எடுக்காத நிலையில் பேச்சு வார்த்தை முடிவுகளை அமுல்படுத்த கோரியும்தொழிற்சாலைக்கு வழங்கப்படும் தண்ணீரை நிறுத்த வலியுறுத்தியும் புதுக்கோட்டையில் வெள்ளி யன்று காலை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் வடகால் விவசாயிகள் சார்பில் மறியல் போராட்டம் நடை பெற்றது. விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பா.புவிராஜ் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மாவட்ட பொரு ளாளர் நம்பிராஜன் ,மாவட்ட துணை தலைவர் டி சீனிவா சன் ,ஒன்றிய தலைவர் பொன்ராஜ் ,மாவட்ட குழு உறுப் பினர் முருகன், சேர்வைகாரன்மடம் கிளை நிர்வாகிகள் அருணாசலமணி, சரவணன் ,சிவத்தையாபுரம் சங்கர், அருணாசலம் கோவங்காடு, சம்பத் சாமுவேல் சிவஞான புரம், ஜெயபால் சிதம்பர நகர், வரலட்சுமி,முத்து செல்வி, மல்லிகா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.</p>
