ஸ்ரீவெங்கடேஸ்வரா பள்ளியில் வாசிப்போர் மன்றக் கூட்டம்
1 hour before
<p><strong>ஸ்ரீவெங்கடேஸ்வரா பள்ளியில் வாசிப்போர் மன்றக் கூட்டம்</strong></p><p>புதுக்கோட்டை, ஜூலை 3 - புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீவெங்க டேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வாசிப் போர் மன்றக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்வுக்கு பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமை வகித்தார். பள்ளியின் இயக்குநர் ரா.சுதர்சன், துணை முதல்வர் குமார வேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவர் களே முன்னின்று இந்த வாசிப்போர் மன்றக் கூட்டத்தை நடத்தினர். நிகழ்வில் சிங்கப்பூர் கவிஞர் இன்பா எழுதிய “ஒரு மேகம் வரைந்து தருவாயா” என்ற இளையோருக்கான நூலிலிருந்து 13 கதைகளை எடுத்து மாணவர்கள் தங்களது வாசிப்பு அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக தமுஎகச மாவட்டச் செயலாளர் கவிஞர் ரெ.வெள்ளைச்சாமி கலந்து கொண்டு உரையாற்றினார். ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் அ.தர்மசேகர் வாழ்த்திப் பேசினார். வாசிப்போர் மன்ற வழி காட்டி காசாவயல்கண்ணன் நிகழ்வை ஒருங்கிணைத்தார்.</p>
