முந்தய பக்கம்

கடலில் மீன் பிடித்த  இலங்கை தமிழர் உயிரிழப்பு

18 Feb 2026, 3:04 pm
கடலில் மீன் பிடித்த  இலங்கை தமிழர் உயிரிழப்பு
<p><strong>கடலில் மீன் பிடித்த &nbsp;இலங்கை தமிழர் உயிரிழப்பு</strong></p> <p>சிதம்பரம்,பிப். 18: சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை கடலில், குள்ளஞ்சாவடி அகதிகள் முகாமில் வசித்து வரும் தர்மலிங்கம் மகன் கோபிகரன் (39) உயிரிழந்தார். இவர் புதன்கிழமை கடலூர் பழைய துறைமுகம் பகுதியில் உள்ள மீனவர்களுடன் படகில் சென்று பரங்கிப்பேட்டை கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது அலையின் சீற்றம் காரணமாக மீன் பிடித்துக் கொண்டிருந்த இவர் தவறி கடலில் விழுந்துள்ளார். பின்னர் மீனவர்கள் இவரது உடலை மீட்டு கரைக்கு எடுத்து வந்தனர். இது குறித்துப் பரங்கிப்பேட்டை காவல்துறையினருக்குத் தகவல் அளித்ததன் பேரில், காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்துப் பரங்கிப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram