பினராயி விஜயனுக்கு எதிரான அமலாக்கத்துறை வேட்டை இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்
28 May 2026, 9:39 pm

பினராயி விஜயனுக்கு எதிரான அமலாக்கத்துறை வேட்டை இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்

கேரள முன்னாள் முதலமைச்சரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், தற்போதைய மாநில எதிர்க்கட்சித் தலைவருமான பினராயி விஜயனைக் குறிவைத்து, அவரின் திருவனந்தபுரம், கண்ணூர் வீடுகள் உட்பட பல்வேறு இடங்களில் மோடி அரசின் அமலாக்கத்துறை புதனன்று சோதனை நடத்தியது.

பினராயி விஜயனின் திருவனந்தபுரம் வாடகை வீட்டில் சுமார் 9 மணி நேரம் நடந்த சோதனையின் முடிவில், அங்கிருந்து அதிகாரிகள் எதையும் கைப்பற்ற முடியவில்லை. அதே போல கண்ணூர் வீட்டில், ஐந்தரை மணி நேர சோதனை மேற்கொண்டும், எந்த ஆவணங்களும் கிடைக்கவில்லை என்று அமலாக்கத்துறை கூறியுள்ளது. அதனால் இந்த சோதனைக்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் குவிந்து வருகிறது.

இந்நிலையில், பினராயி விஜயனை அமலாக்கத்துறை நடத்திய சோதனைக்கு இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக புதனன்று அக்கட்சியின் சர்வதேச வெளியுறவுக் குழு வெளியிட்ட அறிக்கையில்,”தோழர் பினராயி விஜயன் அவர்கள் கேரளாவின் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் ஏனைய ஒடுக்கப்பட்ட மக்களின் நலனை காப்பதில் கோட்பாடு அடிப்படையிலான குரலாக நின்றுள்ளார். அவரின் தலைமையிலான தொடர்ச்சியான இடது ஜனநாயக முன்னணி அரசாங்கங்கள் மக்கள் சார்ந்த மாற்று சாத்தியம்தான் என்பதை நிரூபித்துள்ளது. மிக முக்கியமாக இந்த மாற்றை நிலைநிறுத்தியதுதான் பிற்போக்கு சக்திகளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

நாங்கள் பினராயி விஜயன் அவர்களுக்கும், கேரளாவின் உழைக்கும் மக்களுக்கும் எங்களது புரட்சிகரமான வாழ்த்துக்களையும் சமரசமற்ற ஒருமைப்பாடையும் உரித்தாக்குகிறோம். இத்தகைய மிரட்டல்கள் இடதுசாரிகளை மவுனமாக்கிவிடாது என்பதை நாங்கள் அறிவோம்.

கேரளத்தில் செங்கொடி தொடர்ந்து பறக்கும். அந்த செங்கொடி பாதுகாக்கப்படும். பினராயி விஜயன் மீது கை வைக்காதே!” என இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் கண்டனம் தெரிவித்துள்ளது.