தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

‘தமிழ்நாட்டிற்கும் இலங்கைக்கும் இடையே ஆழமான தொடர்பு உள்ளது’ விஜய்க்கு இலங்கை ஜனாதிபதி திசாநாயக்க வாழ்த்து

10 May 2026, 8:45 pm
‘தமிழ்நாட்டிற்கும் இலங்கைக்கும் இடையே ஆழமான தொடர்பு உள்ளது’ விஜய்க்கு இலங்கை ஜனாதிபதி திசாநாயக்க வாழ்த்து

‘தமிழ்நாட்டிற்கும் இலங்கைக்கும் இடையே ஆழமான தொடர்பு உள்ளது’ விஜய்க்கு இலங்கை ஜனாதிபதி திசாநாயக்க வாழ்த்து

கொழும்பு, மே 10- தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற சி. ஜோசப் விஜய்க்கு இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழகமும் இலங்கையும் ஆழமான வரலாற்று மற்றும் பண்பாட்டுத் தொடர்புகளைப் பகிர்ந்து கொள்கின்றன என்று திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான வலுவான கூட்டாண்மையின் கட்டமைப்பிற்குள், மேலும் பொருளாதார செழிப்புக்காக தமிழகத்துடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் இருப்பதாகவும் திசநாயக்க கூறியுள்ளார்.

இலங்கையின் பிரதான தமிழ்ச் கட்சியான இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் (ITAK) பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரனும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் ஓர் அறிக்கையில், இலங்கையின் மக்கள் தொகையில் சுமார் 18 சதவிகிதம் பேர் தமிழர்கள் (இலங்கை தமிழர்கள் 13%, இந்திய தமிழர்கள் 5%) என்றும், தமிழ்நாட்டிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளில் அவர்களு டனான உறவுகள் முக்கியமானவை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.