தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

இலங்கை கடற்படை அத்துமீறல் காரைக்கால் மீனவர்கள் 12 பேர் கைது

13 Apr 2026, 5:30 am
இலங்கை கடற்படை அத்துமீறல் காரைக்கால் மீனவர்கள் 12 பேர் கைது

இலங்கை கடற்படை அத்துமீறல் காரைக்கால் மீனவர்கள் 12 பேர் கைது

நாகர்கோவில், ஏப்.12 - “அரசியலில் இளைஞர்கள் ஆர்வம் காட்டுவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது; அதேநேரத்தில், அத்தகைய இளைஞர்களின் வேலை வாய்ப்பு மற்றும் எதிர்காலம் குறித்து நடிகர் விஜய்யிடம் என்ன திட்டம் உள்ளது?” என்று சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் கேள்வி எழுப்பினார். மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்ட ணியின் கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் சட்டமன்றத் தொகுதி சிபிஎம் வேட்பாளர் ஆர். செல்லசுவா மியை ஆதரித்துப் பேச்சிப்பாறையில் ஞாயிறன்று நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் அவர் உரையாற்றினார். வேலைவாய்ப்பும் குறைந்தபட்ச ஊதியமும் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பை உறுதிப்படுத்துவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது எனத் தெரிவித்த பெ.சண்முகம், “குறைந்தபட்ச கூலி யாக மாதம் 26 ஆயிரம் ரூபாய் வழங்கப் பட வேண்டும் என்பது எங்களது நிலைப்பாடு. புதிதாகத் தேர்தல் அரசி யலுக்கு வந்துள்ள விஜய், இளைஞர் களின் இந்த அடிப்படைத் தேவைகள் குறித்து என்ன மாற்றத்தைக் கொண்டு வரப் போகிறார் என்பதை அவரிடம் இளைஞர்கள் கேள்வி எழுப்ப வேண்டும்” என்றார். சிறுபான்மையினர் பாதுகாப்பு குறித்த விமர்சனம் விஜய் தனது வேட்புமனுவில் ‘ஜோசப் விஜய்’ எனக் குறிப்பிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், “கிறிஸ்தவர்களின் வாக்குகளைப் பிரிப்பதற்காகவே இவ்வாறு செய்கிறார். பாஜக ஆளும் மாநிலங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட விடாமல் தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டபோது வாய் திறக்காத விஜய், இப்போது கிறிஸ்தவர்களை எப்படிப் பாதுகாப்பார் என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டார். சினிமா மற்றும் அரசியல் நிலைப்பாடு விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப் படம் சட்டவிரோதமாக வெளியானது குறித்துப் பேசிய அவர், அப்படத்திற் காக உழைத்த கலைஞர்கள் பாதிக்கப் பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டினார். இது குறித்து ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரும் கண்டித்த நிலையில், விஜய் மட்டும் கண்டிக்காதது ஏன் எனக் கேள்வி எழுப் பினார். “விஜய்க்கு இப்போது வசூலைவிட (Collection) தேர்தல்தான் (Election) முக்கியமாகத் தெரிந்தாலும், சட்ட விரோதமாகப் படத்தை வெளியிட்ட வர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என வலியுறுத்தி னார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.