தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் உலக செய்திகள்

15 May 2026, 8:55 pm
தீக்கதிர்  உலக செய்திகள்

கொட்டித்தீர்க்கும் கனமழை : வெள்ளத்தில் மிதக்கும் இலங்கை

இலங்கையில் பெய்து வரும் கனமழையால் மட்டக்களப்பு உள்ளிட்ட 7 மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் சுமார் 2500-க்கும் மேற்பட்டோர் வீடுகளில் இருந்து வெளியேற் றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இலங்கை முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மோசமான நிலையின் காரணமாக மட்டக்களப்புப் பகுதியில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக 100-க்கும் மேற்பட்ட வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அந்த நாட்டு அதிகாரிகள் கூறி இருக்கிறார்கள்.

ஐ.நா மனிதாபிமான உதவிக்கு 1.8 பில்லியன் டாலர் ஒதுக்கீடு

இயற்கைப் பேரிடர்கள், பஞ்சம் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உயிர் காக்கும் உதவிகளை வழங்குவதற்காக ஐ.நா அவைக்கு கூடுதலாக 1.8 பில்லியன் டாலர்கள் நிதி வழங் கப்போவதாக டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் டிரம்ப் நிர்வாகம் அறிவித்த 2 பில்லியன் டாலர்களுடன் இந்த நிதியும் சேர்ந்து தரப்படும் என கூறப்பட்டுள்ளது. ஐ.நா அவையின் மனிதாபிமான உதவிக்கு தேவையான நிதிகளை டிரம்ப் வெட்டி வரும் நிலையில் எழுந்த கடும் எதிர்ப்பை தொடர்ந்து இந்த நிதி ஒதுக்கீட்டை அவர் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கியூபா மீதான அமெரிக்காவின் எரிசக்தி தடைகள் மக்களை அரசுக்கு எதிராக திருப்பும் வஞ்சகத் திட்டம்

ஹவானா, மே15- கியூபா மீதான அமெரிக்காவின் எரிசக்தி தடைகள் மக்களை அர சுக்கு எதிராக திருப்பும் வஞ்சகத் திட்டம் என அந்நாட்டின் ஜனாதிபதி மிகுயெல் தியாஸ் கானல் கண்டித் துள்ளார். கியூபா மீது அமெரிக்கா விதித் துள்ள எரிபொருள் தடைகள் கார ணமாக அந்நாடு பெரும் நெருக்கடி யை சந்தித்துள்ளது. நாடு முழுவ தும் மின்வெட்டுகள் ஏற்பட்டு அன்றாடப் பணிகளும் பொருளாதா ரமும் பெரும் நெருக்கடியைச் சந்தித்துள்ளது. இந்தச் சூழலை பயன்படுத்தி அந்நாட்டு மக்களில் ஒரு குழுவை கியூபா அரசுக்கு எதி ராக பிரச்சாரம் செய்ய வைத்து ஆட்சிக்கவிழ்ப்பு நடவடிக்கையை நடத்த அமெரிக்கா திட்டமிட்டு வருகிறது. இந்நிலையில் கியூபா ஜனாதி பதி மிகுயெல் தியாஸ் கானல் அமெரிக் காவின் வஞ்சகத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதுடன் நாட்டின் நிலை பற்றியும் பேசியுள்ளார். தனது சமூக ஊடகத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரி வித்திருப்பதாவது: நாட்டின் மின் உற்பத்தி நிலையங்களின் நிலை மை கடந்த சில நாட்களாக மிகவும் பதற்றமாக உள்ளது. மின்சாரத் தேவையில் 2,000 மெகாவாட்டிற் கம் அதிகமான பற்றாக்குறை ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள் ளது என்று தெரிவித்துள்ளார். இந்த மோசமான நிலைக்கு ஒரே ஒரு காரணம்தான், அது அமெ ரிக்கா எங்கள் நாட்டின் மீது திணித்துள்ள இனப்படுகொலைக்கு இணையான எரிசக்தித் தடையாகும் (energy blockade). எங்களுக்கு எரிபொருள் வழங்கும் எந்தவொரு நாட்டையும் பகுத்தறிவற்ற முறை யில் வரிகள் விதிப்பதன் மூலம் அமெ ரிக்கா மிரட்டுகிறது.அமெரிக்கா வின் இந்த குற்றவியல் தடையால் ஏற்பட்ட எரிபொருள் பற்றாக்குறை யினால் புதன்கிழமை மட்டும் 1,100 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய முடியாமல் தடைபட்டது. எட்டுக் கப்பல் எண்ணெய் தேவை கியூபாவின் மின் உற்பத்திக்கு ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் எட்டு கப்பல்கள் கச்சா எண்ணெய் தேவைப்படுகிறது. ஆனால் ஒரே ஒரு கப்பல் மட்டுமே கியூபா வந்துள் ளது. இதனால் ஏப்ரல் மாதம் பற்றாக் குறையைக் கொஞ்சம் குறைக்க முடிந்தது. அதன் விளைவாக 100 சதவிகிதம் மின்வெட்டுகள் ஏற்படா மல் தடுக்க முடிந்தது என குறிப் பிட்டுள்ளார். மேலும் அமெரிக்காவின் போர் வெறிபிடித்த திட்டங்களுக்கு சேவை செய்யும் அந்நாட்டு ஊடகங்கள், கியூப மக்களின் வீரமிக்க எதிர்ப்பு, அரசாங்கத்தின் உறுதி, அசைக்க முடியாத ஒற்றுமையைக் கண்டு திகைத்து போயுள்ளன என கானல் குறிப்பிட்டுள்ளார். நிமிர்ந்து நிற்கிறது அமெரிக்காவால் விதிக்கப்பட்ட பொருளாதார மற்றும் எரிசக்தி தடை போன்ற கொடூரமான நடவடிக்கை கள் இருந்தபோதிலும், கியூபா நிமிர்ந்து நிற்கிறது. கியூபா ஒரு தோல்வியடைந்த நாடு அல்ல என்பதை அமெரிக்கா ஒப்புக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளது. அறுபது ஆண்டுகளுக்கு முன் விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடையோ அல்லது டிரம்ப்பின் முதல் ஆட்சி காலத்தில் விதிக்கப்பட்ட 243 கடுமையான நடவடிக்கைகளாலோ கியூபப் புரட்சியை அழிக்க முடிய வில்லை. அதனால்தான் அமெரிக்கா கியூபாவிற்கான எரிபொருள் விநி யோகத்தை முற்றிலும் முடக்கும் ஆணையையும், கியூபாவில் வர்த்தகம், முதலீடு செய்பவர்க ளுக்கு நெருக்கடிக்கொடுக்கும் வகையிலான உத்தரவுகளையும் கொண்டு வந்துள்ளது. இது ஒட்டுமொத்த கியூப மக்க ளையும் துன்புறுத்துகின்ற, பணயக் கைதிகளாக்கி கியூப அரசுக்கே எதிராக திருப்புவதையும் நோக்க மாகக் கொண்ட ஒரு வஞ்சகத் திட்டமாகும். ஒரு சிறிய தீவிர வலதுசாரி குழுவினர், கியூபாவில் நிலவி வருகின்ற தற்போதைய நிலை பற்றி வேண்டுமென்றே இழி வாகவும் பொய்யாகவும் தவறான தகவல்களைப் பரப்புகின்றனர். அதே நேரத்தில் எங்கள் மக்களுக்கு எதிராக அதிக நெருக்கடிகளையும் அச்சுறுத்தல்களையும் அமெரிக்கா மேலும் அதிகரிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைக்கின் றனர். எதிர்கொள்வோம்! எங்கள் பதில் என்றும் மாறா மல் அப்படியே உள்ளது. சமமான விதிகளின் அடிப்படையில் பேச்சு வார்த்தைக்கு நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம். நாங்கள் தொடர்ந்து எதிர்த்து நிற்போம், தொடர்ந்து கட்டமைப்போம். ஒரு தேசமாக ஒன்றிணைந்து, கடினமான சவால்களை எதிர்கொள் வதில் உறுதியாக இருந்து, சொந்த முயற்சியால் மகத்தான சிரமங்க ளை வெல்வது நம் கைகளில்தான் உள்ளது என்பதில் நாங்கள் பெரும் நம்பிக்கையுடன் இருக்கிறோம் என்று கியூபா ஜனாதிபதி கானல் கூறியுள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.