கேரளத் தேர்தல் களத்தில் மலிவான ஆதாயங்களுக்காக அவதூறு பரப்புவதா?
26 Mar 2026, 2:46 pm
<p><strong>கேரளத் தேர்தல் களத்தில் மலிவான ஆதாயங்களுக்காக அவதூறு பரப்புவதா?</strong></p>
<p>புதுதில்லி, மார்ச் 26- காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி - மல்லிகார்ஜூன கார்கே ஆகி யோரின் ஆத்திரமூட்டும் அறிக்கை களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள் ளது. இதுதொடர்பாக கட்சியின் அர சியல் தலைமைக்குழு வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறப் பட்டிருப்பதாவது: கேரள முதலமைச்சருக்கு எதி ராகவும், மார்க்சிஸ்ட் கம்யூனி ஸ்ட் கட்சியின் மதச்சார்பின்மை மாண்புக்கு எதிராகவும் ராகுல் காந்தியும், மல்லிகார்ஜூன கார்கே யும் வெளியிட்டுள்ள ஆத்திரமூட்டும் அறிக்கைகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கடும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறது. பாஜக-வை எதிர்க்க அஞ்சுவது ஏன்? சட்டமன்றத் தேர்தல்களில் மலிவான தேர்தல் ஆதாயங்களைப் பெறுவதற்காகவே அவர்கள் இத்தகைய அவதூறுகளைப் பரப்பி வருகின்றனர். பாஜக-வை எதிர்ப்பதற்குப் பதிலாக, அவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைக் குறிவைப்பதன் மூலம், மதவாத மற்றும் சர்வாதிகார சக்திகளை எதிர்த்துப் போராடுவதாகத் தாங்கள் முன்வைத்த கோரிக்கை யிலிருந்து காங்கிரஸ் தலைவர்கள் பின்வாங்குகின்றனர். கேரள மக்கள் இந்தத் தீய நோக்கத்தை நிச்சயம் புரிந்து கொள்வார்கள். பாஜக-வில் இணையும் காங்கிரஸ் தலைவர்கள் மாநிலத்திற்கு மாநிலம், தங்கள் கட்சித் தலைவர்கள் ஏன் கட்சியை விட்டு விலகி பாஜகவில் இணைகிறார்கள் என்பது குறித்து காங்கிரஸ் தலைவர்கள் சுயபரி சோதனை செய்துகொள்ள வேண்டும். அசாமின் தற்போதைய பாஜக முதலமைச்சர், முந்தைய காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் முக்கியத் துறைகளை நிர்வகித்தவர் என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும். திரிபுராவில், இடது முன்னணியைத் தோற்கடிக்கும் நோக்கில், 2018ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியின் ஒட்டு மொத்தத் தலைமையும் பாஜக வில் இணைந்தது. ஒன்றிய அமைச் சரவையில் உள்ள பல அமைச்சர் களும், பாஜகவைச் சேர்ந்த நாடாளு மன்ற உறுப்பினர்களும் முன்னொரு காலத்தில் காங்கிரசின் முக்கியத் தலைவர்களாகவே திகழ்ந்த வர்கள். காங்கிரஸ் கட்சியானது பாஜக விற்குத் தலைவர்களை வழங்கும் ஓர் துணை அமைப்பாகவே (feeder organisation) மாறிவிட்டது. அம்பலமான கள்ளக் கூட்டணி தற்போதைய கேரள இடது ஜன நாயக முன்னணி அரசின் பத்தாண்டு கால ஆட்சியில், கேரளத்தில் ஒரு மதக்கலவரம்கூட நிகழவில்லை. மாறாக, அம்மாநில வரலாற்றி லேயே மிக மோசமான மதக்கலவர மான ‘மராட் கலவரம்’, ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சியின் போதுதான் நடந்தது. இந்தத் தேர்தலில்கூட, காங்கிரஸ் கட்சி யானது சிறுபான்மை அடிப்படை வாத சக்திகளுடன் கூட்டணி அமைத்துள்ளது. கேரளத்தில் நடை பெற்ற பல்வேறு தேர்தல்களிலும், அண்மையில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தல்களிலும், காங்கிரஸ் - முஸ்லிம் லீக் - பாஜக ஆகிய கட்சிகளுக்கு இடையில் செயல்பட்டுவந்த கள்ளக் கூட்டணி (nexus) அம்பலமானது. கெஜ்ரிவால் கைதுக்கும் காரணமான காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக ஒன்றிய அரசின்கீழ் இயங்கும் புலனாய்வு முகமை களைத் தவறாகப் பயன்படுத்து வதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து எதிர்த்து வந்துள்ளது. ஆனால், எதிர்க்கட்சித் தலைவ ரான ராகுல் காந்தியோ, அமலாக்கத் துறை மற்றும் பிற மத்திய முகமைகளைப் பயன்படுத்தி, ஓர் எதிர்க்கட்சி முதலமைச்சரைக் கைது செய்யுமாறு வலியுறுத்தி வருகிறார். தில்லியின் முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலையும் இதேபோன்று கைது செய்யுமாறு காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியிருந்தது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இது அவர்களின் சந்தர்ப்பவாத நிலைப்பாட்டைத் தெளிவாக வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. கேரள மக்கள் பதிலடி தருவார்கள் கடந்த பத்தாண்டுகளாக இடது ஜனநாயக முன்னணி ஆட்சியின் கீழ், முன்னெப்போதும் இல்லாத அளவிலான வளர்ச்சியையும் மத நல்லிணக்கத்தையும் கண்டுள்ள கேரள மக்கள், காங்கிரஸ் தலைமை யிலான ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் பாஜக தலைமை யிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆகிய இரு கூட்டணிகளுக்கும் ஒரு தகுந்த பதிலடியைக் கொடுப்பார்கள். இவ்வாறு அரசியல் தலைமைக் குழு அறிக்கையில் கூறப் பட்டுள்ளது. (ந.நி.)</p>
<p> </p>
