முந்தய பக்கம்

210 மாணவர்களுக்கு விளையாட்டு சீருடைகள்

27 Nov 2025, 3:11 pm
210 மாணவர்களுக்கு விளையாட்டு சீருடைகள்
<p>திருப்பூர், நவ. 27 - திருப்பூர் அனுப்பர்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி யில் 210 மாணவர்களுக்கு ரூ.25 ஆயிரம் &nbsp;மதிப்பில் விளையாட்டுச் சீருடைகளை தன்னார்வலர்கள் வழங்கினர். அனுப்பர்பாளையம் ஊராட்சி ஒன் றிய தொடக்கப் பள்ளியில் வியாழக்கி ழமை நடைபெற்ற விழாவில் அம்மாபா ளையம் கணேசா ஹாலோ பிளாக் நிறு வன உரிமையாளர்கள் அ.கணேசன், க. பாரத் ஆகியோர் இந்த விளையாட்டுச் சீருடைகளை வழங்கினர். இந்நிகழ்வில் திருப்பூர் வடக்கு வட் டாரக் கல்வி அலுவலர்கள் சியாமளா, பாலமுருகன், ஊராட்சி ஒன்றிய தொடக் கப்பள்ளி செல்லம்மாள் காலனி தலை மையாசிரியர் வே நாகராஜ் கணேஷ்கு மார், சிஐடியு திருப்பூர் மாவட்டச் செய லாளர் ரங்கராஜ், பள்ளியின் பெற்றோர் &nbsp;ஆசிரியர் கழகத் தலைவர் ரத்தினசாமி, &nbsp;முன்னாள் மாணவர் சௌந்தர்ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்ன தாக பள்ளித் தலைமை ஆசிரியை ஞான லட்சுமி வரவேற்றுப் பேசினார். நிறை வில் ஆசிரியர் கண்ணன் குமரன் நன்றி &nbsp;கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram