தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விளையாட்டு

6 Jun 2026, 10:52 pm
விளையாட்டு

உலகக்கோப்பை கால்பந்து 2026 ஈரானுக்கு அமெரிக்கா விசா அனுமதி : துருக்கி தகவல்

23ஆவது சீசன் உலகக்கோப்பை கால்பந்து தொடர் ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை அமெ ரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் கூட்டாக நடைபெற உள்ளது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடனான போரில் ஈரான் ஈடுபட்டு வருவதால், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ், சியாட்டில் மைதானங்களில் விளையாட ஈரான் நாட்டுக்கு அனுமதியளிக்கப்படுமா என்ற சந்தேகம் ரசிகர்களிடையே எழுந்தது. இத்தகைய சூழலில் உலகக்கோப்பை கால்பந்து தொடருக்காக ஈரான் கால்பந்து அணியின் வீரர்களுக்கு விசாக்கள் அங்கீகரிக்கப்பட்டு, அவற்றைப் பெறும் செயல் முறையில் இருப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் துருக்கிக்கான அமெரிக்க தூதர் டாம் பராக்,”ஈரானுக்கு அமெரிக்கா விசா அனுமதி வழங்க முன் வந்துள்ளது பாராட்டுக்குரியது” என்று கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,”தற்போது விளை யாட்டு எல்லைகளைக் கடந்து நிற்கிறது. ஈரானுக்கு அமெ ரிக்கா விசா அளிக்க சம்மதம் அளித்துள்ளது. உலகம் முழுவ திலுமிருந்து வரும் போட்டியாளர்களையும் ரசிகர்களையும் வரவேற்பதை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்” என பராக் கூறியுள்ளார்.

முதல்முறையாக பிரெஞ்சு ஓபன் வெல்லப்போவது யார்? ஜெர்மனியின் ஜுவரேவ் - இத்தாலியின் கோபோலி இடையே பலப்பரிட்சை

களிமண் தரையில் நடைபெறும் ஒரே கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான பிரெஞ்சு ஓபன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், ஞாயிறன்று நடைபெறும் (இந்திய நேரப்படி மாலை 6:30 மணி) ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் முதல்முறையாக பிரெஞ்சு ஓபன் கைப்பற்றும் நோக்கில் ஜெர்மனியின் ஜுவரேவ் - இத்தாலியின் கோபோலி பலப்பரிட்சை நடத்துகின்றனர். ஜுவரேவ் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் 4ஆவது முறையாக இறுதிக்கு முன்னேறியுள்ளார். அவர் 2020 அமெரிக்கா, 2024 பிரெஞ்சு ஓபன், 2025 ஆஸ்திரேலிய ஓபன் உள்ளிட 3 கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் இறுதிக்கு முன்னேறி கோப்பை வெல்லும் வாய்ப்பை பறிகொடுத்துள்ளார். அதே சமயம் இத்தாலியின் கோபோலி கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் முதன்முறையாக இறுதிக்கு முன்னேறியுள்ளார். இருவரும் இதுவரை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றதில்லை என்பதால் இந்த ஆட்டம் பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கிய வீரர்களை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியுள்ளதால் பட்டம் வெல்ல கோபோலிக்கு சகல வாய்ப்புகளும் உள்ளன. எனினும் அதிரடிக்கு பெயர் பெற்ற ஜுவரேவ் கோப்பை வெல்ல 10% கூடுதல் வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா ஒரே நாளில் 368 ரன்கள் குவிப்பு

ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி களைக் கொண்ட தொடரில் பங்கேற்க ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த தொடரின் தொடக்க நிகழ்வாக ஒரே ஒரு டெஸ்ட் போட்டி சனியன்று முல்லன்பூரில் (நியூ சண்டிகர்) தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து முதலில் கள மிறங்கியது. தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் - கே.எல்.ராகுல் கள மிறங்கினர். ஜெய்ஸ்வால் 24 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த தமிழக வீரர் சாய் சுதர்சன் பொ றுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி னார். சாய் சுதர்சன் 104 பந்துகளில் 13 பவுண்டரிகளுடன் 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய கேப் டன் கில் - கே.எல்.ராகுலுடன் ஜோடி சேர்ந்தார். 165 பந்துகளை எதிர் கொண்டு 11 பவுண்டரிகளுடன் (100 ரன்கள்) சதமடித்த சில நிமி டங்களில் கே.எல்.ராகுல் ஆட்ட மிழந்தார். அவரை தொடர்ந்து கேப்டன் கில்லும் சதமடித்தார். கே.எல்.ராகுல் ஆட்டமிழந்தவுடன் நிதான அதிரடியுடன் விளையாடிய ரிஷப் பண்ட் அரை சதமடித்தார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 85 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 368 ரன்கள் குவித்தது. கில் (103), பண்ட் (50) ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். ஆப்கானிஸ்தான் தரப்பில் அதிக பட்சமாக சபி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஞாயிறன்று தொடர்ந்து 2ஆம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.