விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி
15 Dec 2025, 2:48 pm
<p><strong>விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி</strong></p>
<p>திருப்பூர், டிச.15- திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டி நகராட்சி, விஷ்வாஷ் மஹாலில் டாக்டர். கலைஞர் விளையாட்டு உப கரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி வார்டுகளுக்கு விளையாட்டு உபகரணங் கள் அடங்கிய 725 தொகுப்புகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வ ராஜ் வழங்கினர். தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திங்களன்று சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கிலிருந்து காணொலி காட்சி வாயிலாக நகர்புற உள் ளாட்சிகளுக்கான டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரங் கள் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, 7 நகராட்சிகள் மற்றும் 14 பேரூராட்சிகளில் உள்ள 440 வார்டுக ளுக்கும் இரண்டாம் கட்டமாக இன்று டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் திருப்பூர் மாநகராட்சிக்கு 180 தொகுப்புகள், 07 நகராட்சிக ளுக்கு 330 தொகுப்புகள் 14 பேரூராட்சிகளுக்கு 215 தொகுப்பு கள் என மொத்தம் 30 விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய 725 தொகுப்புகள் வழங்கப்பட்டுள்ளது. தமிழ் வளரச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வ ராஜ் ஆகியோர் வழங்கினர். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரணவரே திருப்பூர் மாநகராட்சி 4 ஆம் மண்டலத் தலைவர் இல.பத்ம நாபன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ரகுகுமார், உள் ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.</p>
<p> </p>
