முந்தய பக்கம்

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு விளையாட்டு உபகரணம்

16 Feb 2026, 2:37 pm
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு விளையாட்டு உபகரணம்
<p><strong>நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு விளையாட்டு உபகரணம்</strong></p> <p>தேனி, பிப்.16- &nbsp;கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் விளை யாட்டு வீரர்களுக்கு உபகர ணங்களை தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் வழங் &nbsp;கினார். தமிழ்நாடு துணை முத லமைச்சர் உதயநிதி ஸ்டா லின் புதுக்கோட்டை மாவட் டத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம் &nbsp;பாட்டுத் துறை சார்பில் நடை பெற்ற விழாவில், நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு டாக்டர் கலைஞர் விளையாட்டு உப கரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ், விளை யாட்டு உபகரணங்கள் (30 வகையான விளையாட்டு உபகரணங்கள்) வழங்கு வதை காணொலி வாயிலாக &nbsp;தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங், தேனி மக்களவை உறுப்பினர் தங்க.தமிழ்செல்வன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சர வணக்குமார் முன்னிலை யில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதி கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய தொகுப்புகளை வழங்கி னார். &nbsp;தேனி மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சிகளுக்கு உட்பட்ட 177 வார்டுகளுக்கு தலா 2 விளையாட்டு உபகர ணங்கள் அடங்கிய தொகு ப்புகள் வீதம் 354 டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய தொகுப்புகள் மற்றும் 22 &nbsp;பேரூராட்சிகளுக்கு உட்பட்ட &nbsp;336 வார்டுகளுக்கு தலா 1 &nbsp;விளையாட்டு உபகரணங் கள் அடங்கிய தொகுப்புகள் வீதம் 336 டாக்டர் கலை ஞர் விளையாட்டு உபகர ணங்கள் அடங்கிய தொகுப்புகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இந்நிகழ்வில் நகர் மன்றத் தலைவர்கள், பேரூ ராட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram