தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

12 Nov 2025, 3:20 pm
கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

கூட்டுறவுத் துறை பணியாளர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள்

திருப்பூர் , நவ.12- கூட்டுறவுத் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக் கான விளையாட்டுப் போட்டிகள் புதனன்று நடைபெற்றது. இதில், 140 பேர் பங்கேற்றனர். அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு, திருப்பூர் கல்லூரி சாலையில் உள்ள சிக்கண்ணா அரசு கலைக்  கல்லூரியில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்ட விளையாட்டு  மேம்பாட்டு ஆணைய மைதானத்தில் திருப்பூர் மாவட்ட கூட்டு றவுத் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் புதனன்று நடைபெற்றது. கபாடி,  கைப்பந்து, இறகுபந்து உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிக ளில் தாராபுரம், அவிநாசி, உடுமலை, மடத்துக்குளம், பல்ல டம் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 140 அலு வலர்கள் கலந்துகொண்டிருந்தனர். இதில் கலந்து கொண்டு  வெற்றி பெற்ற அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அடுத்த வாரம் நடைபெறவுள்ள கூட்டுறவு வார விழாவில் பரிசு கள் வழங்கப்படவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் சைகை மொழிப் பயிற்சி

திருப்பூர், நவ.12- திருப்பூர் மாநகராட்சி நொய்யல் வீதியில் உள்ள மாநக ராட்சி தொடக்கப் பள்ளியில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை  பயிலும் மாணவ, மாணவிகளுக்கு யூடியூபில் வீடியோ ஒளிப ரப்பு மூலம் சைகை மொழிப் பாடங்கள் செவ்வாயன்று கற்பிக் கப்பட்டது. அரசு பள்ளிகளில் படிக்கும், செவித்திறன் பாதிக்கப்பட்ட மாணவ,  மாணவியருக்கு கல்வி கற்பிப்பதற்காகவும், அவர்க ளோடு சக மாணவர்கள் சகஜமாக கலந்துரையாட ஒருங்கி ணைந்த பள்ளிக்கல்வி திட்ட மாநில இயக்ககம் சார்பில்  அரை  மணி நேர சைகை மொழி காணொளியாக தயாரிக்கப்பட்டு உள்ளன. கல்வி தொலைக்காட்சியில் இதை ஒளிபரப்பவும்,  மாணவ, மாணவிகளை காணச் செய்யும் வகையில் மாவட்ட  முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டி ருந்தது. அதன்படி செவ்வாயன்று முதல் இந்த பயிற்சி  அனைத்து அரசு பள்ளிகளிலும் துவங்கியது. காலை 11 மணி  மற்றும் மாலை 5 மணி என இரு முறை ஒளிபரப்பப்படு கின்றன. இதில், ஆங்கில எழுத்துக்கள்,  எண்கள், வார நாட் கள், நிறங்கள், வாழ்த்துகள், மாதங்கள், உணவுப் பொருட் கள், குடும்ப உறுப்பினர்கள், நடத்தைகள், வெளிப்பாடுகள்  உள்ளிட்ட பாடங்கள் காணொளியாக தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றை பார்த்து, செவித்திறன் பாதிக்கப்பட்ட, மாணவ மாணவியருக்கு கற்பிக்கலாம். அந்த வகையில் திருப்பூரில் நொய்யல் வீதியில் உள்ள  மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை  பயிலும் மாணவ, மாணவிகளுக்கு யூடியூபில் வீடியோ  ஒளிபரப்பு மூலம் சைகை மொழிப்பாடங்கள் கற்பிக்கப்பட்டது.  வகுப்பில் உள்ள மாணவ, மாணவிகள் திரையில் காண்பிக்கப் படும் படங்களுக்கு ஏற்ப, திரையில் தோன்றுபவர் பேசும் மற்றும் காட்டும் சைகைகளுக்கு ஏற்றவாறு தங்களது உடல்  மொழிகளை அசைத்து சைகை மொழியை பயின்றனர். சிறப்பு குழந்தைகள் மட்டுமின்றி மற்ற குழந்தைக ளும் இந்த சைகை மொழியை கற்றுக் கொள்வதன் மூலம் சிறப்பு குழந்தைகளுடன் எளிதாக தொடர்பு கொள்ள முடியும்.  உரையாட முடியும், நட்பு பாராட்ட முடியும் என்பதால் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் இதற்கான ஏற்பாடுகள் செய் யப்பட்டுள்ளது. செவ்வாயன்று துவங்கிய இந்த பயிற்சி ஜன வரி மாதம் வரை நடத்தப்படவுள்ளதாக ஆசிரியர்கள் தெரி வித்தனர்.

சலீம் அலி பிறந்தநாள்: பறவைகள் விழிப்புணர்வு கருத்தரங்கம்

திருப்பூர், நவ.12 - பறவைகள் ஆய்வாளர் சலீம் அலி பிறந்த தினத்தை முன் னிட்டு திருப்பூர் சிக்கண்ணா கல்லூரியில் பறவைகள் விழிப்பு ணர்வு கருத்தரங்கம் நடத்தப்பட்டது. திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்ப ணித் திட்டம் அலகு - 2 சார்பாக புதனன்று கல்லூரி வளாகத்தி லுள்ள கலாம் கனவு பூங்காவில் பறவை மனிதர் சலீம் அலியின்  பிறந்த தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு கருத்தரங்கு நடை பெற்றது. மாணவ பிரதிநிதி கிருஷ்ணமூர்த்தி முன்னிலை ஏற்க, கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் தலைமை வகித்தார்.  அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் உரையாற்றி னார். இந்தியாவின் பறவை மனிதர் சலீம் அலி, முறையான  பறவை கணக்கெடுப்பை நாடு முழுவதும் நடத்திய முதல் இந் தியர். பறவைகள் இல்லையேல்  மனிதர்கள் இல்லை, பறவை கள் தங்கள் எச்சங்களின் மூலமாக காடுகளை உருவாக்கி பல் லுயிர் பெருக்கத்தை பாதுகாக்கின்றன. பறவைகள், விளைச் சலை பாதிக்கும் பூச்சிகளை உண்டு பயிரின் மகசூலை அதிக ரிக்கிறது. ஆகையால் அனைவரும்  பறவைகளை நேசித்து,  அவைகளை பாதுகாக்கும் முயற்சிகளையும், விழிப்புணர் வையும் ஏற்படுத்த வேண்டும் என்று கூறினார். மாணவ செய லர்கள் செர்லின், ரேவதி, நவீன்குமார், பிரவீன் ஆகியோர்  தலைமையில் கல்லூரி வளாகத்தில் பறவை நோக்கலில் ஈடு பட்டனர், பிறகு பறவைகளை நேசிப்போம்,  பாதுகாப்போம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நிகழ்வில் ஏராள மான மாணவ மாணவிகள்  கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.