முந்தய பக்கம்

கடலூர் மாவட்டத்தில்  விளையாட்டுப் போட்டிகள் துவக்கம்

31 Jan 2026, 5:27 pm
கடலூர் மாவட்டத்தில்  விளையாட்டுப் போட்டிகள் துவக்கம்
<p><strong>கடலூர் மாவட்டத்தில் &nbsp;விளையாட்டுப் போட்டிகள் துவக்கம்</strong></p> <p>கடலூர், ஜன.31- &nbsp;தமிழக முதலமைச்சர் இளைஞர் விளையாட்டுத் திருவிழாவை முன்னிட்டு, கடலூர் அறிஞர் அண்ணா விளையாட்டரங்கில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதற்கு மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கி, சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், மேயர் சுந்தரிராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன் ஆகியோர் முன்னிலையில் போட்டியைத் தொடங்கி வைத்தார். &lsquo;இது நம்ம ஆட்டம் - 2026&rsquo; என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் ஊராட்சி ஒன்றிய மற்றும் மாவட்ட அளவில் விளையாட்டுப் போட்டிகளை நடத்த அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதன்படி, கடலூர் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றிய அளவிலான போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டன. இப்போட்டிகளில் ஆடவர் மற்றும் மகளிருக்கான தடகளம் (100 மீட்டர்), குண்டு எறிதல், கபடி, வாலிபால், கேரம், கயிறு இழுத்தல் மற்றும் ஆடவர்களுக்கான ஸ்ட்ரீட் கிரிக்கெட், மகளிருக்கான எறிபந்துப் போட்டிகளில் முதலிடம் பெற்றவர்களுக்கு மாவட்ட அளவிலான போட்டிகள் தற்போது நடைபெறுகின்றன. இப்போட்டிகளில் மொத்தம் 950 நபர்கள் பங்கேற்றுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை அன்று ஓவியம், கோலப்போட்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகள் நடைபெற உள்ளன. மாவட்ட அளவிலான கபடி மற்றும் ஸ்ட்ரீட் கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி பெறுவோர் மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொள்வர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் மகேஷ் மற்றும் பயிற்சியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram