வட இந்தியாவில் தொழிலாளர் வர்க்கத்தின் போர்க்குணமிக்க எழுச்சி ஸ்போர்ட்கிங் ஆலை பெண் தொழிலாளர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க எழுச்சி
12 Jun 2026, 8:55 pm

வட இந்தியாவில் தொழிலாளர் வர்க்கத்தின் போர்க்குணமிக்க எழுச்சி ஸ்போர்ட்கிங் ஆலை பெண் தொழிலாளர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க எழுச்சி

“ஒடுக்குமுறையை முறியடித்த விவசாயி - தொழிலாளர் ஒருமைப்பாடு”

வேலைநிறுத்தம் 59

பதிந்தா, ஜூன் 12- நொய்டா தொழில் மண்டலங்களில் ஊதியத் தேக்கத்திற்கு எதிராக வெடித்த தொழிலாளர் எழுச்சிகள், பஞ்சாப் மாநிலம் படிண்டாவில் உள்ள ‘ஸ்போர்ட்கிங் இந்தியா லிமிடெட்’ (Sportking India Limited) ஜவுளி ஆலைத் தொழிலாளர்களுக்குப் பெரும் உத்வேகத்தை அளித்தன. இதனை ஒடுக்க நினைத்த மாவட்ட நிர்வாகமும், ஆலை முதலாளிகளும் நொய்டா பாணியிலேயே 13 பெண் தொழிலாளர்கள் உட்பட 130-க்கும் மேற்பட்ட தொழிலாளர் மற்றும் விவசாய சங்கத் தலைவர்களைச் சட்டவிரோதமாகக் காவலில் எடுத்து ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டனர்.

ஆலையின் விடுதிகளில் தங்கிப் பணிபுரியும் 44 சதவீதப் பெண் தொழிலாளர்களை எளிதாக மிரட்டிவிடலாம் என்று கணக்குப்போட்ட கார்ப்பரேட் நிர்வாகம், இப்பிராந்தியத்தின் போர்க்குணமிக்க விவசாய மற்றும் விவசாயத் தொழிலாளர் அமைப்புகளின் வர்க்க ஒருமைப்பாட்டு வீரியத்தை முற்றிலும் தவறாக மதிப்பிட்டு, இறுதியில் தொழிலாளர்களின் காலடியில் மண்டியிட்டுள்ளது. ஓஸ்வால் (Oswal) குழுமத்திற்குச் சொந்தமான இந்த மெகா நூல் நூற்பு ஆலையில் சுமார் 2,500 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களில் பெரும்பான்மையானோர் உள்ளூர் கிராமங்களைச் சேர்ந்த மற்றும் பிற மாநிலங்களிலிருந்து புலம்பெயர்ந்த பெண் தொழிலாளர்கள் ஆவர்.

“நரகத்திற்கு” இணையான பணிச்சூழலும் அற்பக் கூலிச் சுரண்டலும்

ஆலையில் அதிநவீன இயந்திரங்கள் (Rieter technology) பயன்படுத்தப்பட்ட போதிலும், தொழிலாளர்களின் பணிச்சூழல் நரகத்தை விட மோசமாக இருந்தது. பருத்தி மற்றும் செயற்கை நார் தூசிகளால் ஆலைக்குள் காற்று எப்போதும் தடிமனாக இருக்கும். இதனால் தொழிலாளர்கள் கடுமையான சுவாச நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். நூல் தரத்தை உறுதிப்படுத்துவதற்காக ஆலைக்குள் வெப்பநிலை தொடர்ந்து 45 டிகிரி செல்சியஸாக பராமரிக்கப்படுவதால், தொழிலாளர்கள் இந்த அதீத வெயிலில் வெந்து உருகுகின்றனர். இயந்திரங் களின் காதைச் செவிடாக்கும் சத்தத்தால், சில ஆண்டுகளிலேயே தொழிலாளர்களின் கேட்கும் திறன் பறிபோகிறது.

இந்த அபாயகரமான வேலைக்கு வழங்கப்பட்ட தினக்கூலி வெறும் ₹434 மட்டுமே. பெரும்பாலானோருக்கு இஎஸ்ஐ மருத்துவக் அட்டைகளோ, முறையான சம்பளப் பட்டியலோ வழங்கப்படவில்லை. பற்றாக்குறையான ஆட்களைக் கொண்டு, கடைசி நேரத்தில் 12 மணி நேரக் கூடுதல் வேலை கட்டாயமாகத் திணிக்கப்பட்ட போதிலும், அதற்கான சட்டப்படியான இரட்டிப்பு ஊதியம் வழங்கப்படாமல் கணக்குகள் மோசடி செய்யப்பட்டன. பெண் தொழிலாளர்களின் விடுதி அறைகளில் 8 பேர் வரை ஆட்டு மந்தைகளைப் போல அடைக்கப்பட்டனர். மிக மோசமான உணவே வழங்கப்பட்டதுடன், ஆலைக்குள் மொபைல் போன் பயன்படுத்தவும் பெண்களுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

ஏப்ரல் 19 - வெடித்த கொந்தளிப்பும் தொழிற்சங்க உருவாக்கமும்

ஒரு தொழிலாளியே பல பிரேம்களை (Frames) கவனிக்க வேண்டும் என்று வேலைப்பளுவை நிர்வாகம் பலமடங்கு ஏற்றிய போது, ஏப்ரல் 19 அன்று கணக்கு எண் 6 (Account No. 6) பிரிவில் தொழிலாளர்கள் போர்க்கொடி தூக்கினர். ஆலை வாயிலில் தன்னிச்சையாக வெடித்த தர்ணா போராட்டத்தில், பிற ஷிப்ட் தொழிலாளர்களும் பேருந்துகளிலிருந்து இறங்கி இணைந்தனர். தகவலறிந்து விவசாயத் தொழிலாளர் சங்கம், நவ்ஜவான் பாரத் சபா மற்றும் பாரதீய கிசான் யூனியன் (BKU Ekta) ஆகிய அமைப்புகள் ஆலை வாயிலில் திரண்டன. மாத ஊதியம் ₹26,000 கோரி நடந்த இப்போராட்டத்தை மழுப்ப, நிர்வாகம் ஒரு வாரக் கெடு கேட்டது.

இதற்கிடையில் கிராம வாரியாகக் கூட்டங்களை நடத்தி, உள்ளூர்-புலம்பெயர்ந்த தொழிலாளர் பிரிவினையை முறியடிக்கத் தோழர்கள் தயாராயினர். நிர்வாகம் கொடுத்த ₹30 தினசரி உயர்வு ஏமாற்று வேலையை நிராகரித்து, ஏப்ரல் 26 அன்று ஆலை வாயிலில் மீண்டும் மாபெரும் போராட்டம் வெடித்தது. அந்த ஆவேசக் களத்திலேயே ‘ஸ்போர்ட்கிங் தொழிலாளர் சங்கம், ஜீதா’ (Sportking Workers’ Union, Jeeda) என்ற புதிய தொழிற்சங்கம் பிறந்தது.

ஏப்ரல் 27 அதிரடி ‘சக்கா ஜாம்’ மற்றும் வர்க்க வெற்றி உடன்பாடு

போராட்டத்தை ஒடுக்க ஏப்ரல் 27 அன்று நள்ளிரவில் காவல்துறை 130 தோழர்களைக் கைது செய்தது. இந்த அடக்குமுறையால் ஆத்திரமடைந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் விவசாயிகளும் திரண்டு, ‘படிண்டா - அமிர்தசரஸ் தேசிய நெடுஞ்சாலையை’ முற்றுகையிட்டுப் பிரம்மாண்ட ‘சக்கா ஜாம்’ (சாலை மறியல்) போராட்டத்தை நடத்தினர். கைது செய்யப்பட்டவர்கள் நிபந்தனையின்றி விடுவிக்கப்படும் வரை பேச்சுவார்த்தை இல்லை எனப் பெண் தொழிலாளர்கள் வீதியில் உறுதியோடு அமர்ந்தனர். மக்கள் சக்தியைக் கண்டு அஞ்சிய அரசு, கைதானவர்களை உடனடியாக விடுவித்தது.

இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 28 மாலை எட்டப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க உடன்பாட்டின் முக்கிய அம்சங்கள்:

• திறனற்ற தொழிலாளர்களின் தினக்கூலி ₹500 ஆகவும், பகுதி திறனுடையோருக்கு ₹520 ஆகவும் அதிரடியாக உயர்த்தப்பட்டது.

• விடுதிகளில் தரமான உணவு, அனைவருக்கும் இஎஸ்ஐ அட்டைகள் மற்றும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றோர் மீது பழிவாங்கல் நடவடிக்கை இல்லை என எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்கப்பட்டது.

• பெண் தொழிலாளர்களிடம் வம்பிழுத்த பாதுகாப்பு அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ஒப்புக்கொள்ளப்பட்டது

நவீனத் தொழில்துறையில் பெண்களின் பங்களிப்பு (Feminisation of workforce) அதிகரித்து வரும் சூழலில், புதிய உழைப்புச் சட்டத் தொகுப்புகளின் 12 மணி நேரச் சுரண்டலையும், குடும்பப் பாரத்தையும் சுமக்கும் பெண் தொழிலாளர்கள், விவசாய வர்க்கத்தின் கூட்டு ஒருமைப்பாட்டோடு நடத்திய இப்போராட்டம், கார்ப்பரேட் மேலாதிக்கத்தை வீழ்த்திய மகத்தான வர்க்க எழுச்சியாகும்.

- தி லெப்ட் வியூஸ்