கெட்டுப்போன சிக்கன் - லூலூ மால் மீது புகார்
17 Mar 2026, 3:26 pm
<p><strong>கெட்டுப்போன சிக்கன் - லூலூ மால் மீது புகார்</strong></p>
<p>கோவை,மார்ச் 17- கெட்டுப்போன சிக் கன் சாப்பிட்டு குழந்தை கள் பாதிப்படைந்த நிலையில், கோவையில் உள்ள லூலூ ஹைப்பர் மார்க்கெட் மீது உணவு பாதுகாப்பு துறை அதிகாரியிடம் பாதிக்கப்பட்டவர் புகார் அளித்தார். கோவை, மதுக்கரையை சேர்ந்த சசிகுமார் என்ப வர், திங்களன்று இரவு சுமார் 8 மணியளவில் தனது இரண்டு குழந்தைகளுடன் புலியகுளம் சாலையில் உள்ள லுலு லூலூ ஹைப்பர் மார்க்கெட்டுக்கு சென் றுள்ளார். அப்போது அங்குள்ள உணவகத்தில் இருந்து சிக்கன் லாலிபாப் பார்சல் வாங்கி குழந்தை களுக்கு கொடுத்துள்ளார். குழந்தைகள் அந்த சிக்கனை சாப்பிட்ட சில நேரங்களிலேயே கடுமை யான வாந்தி எடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் பதற்றமடைந்த சசிகுமார், மீதமிருந்த சிக்கனை பரி சோதித்தபோது அதில் துர்நாற்றம் வீசியுள்ளது. இதையடுத்து, சம்பவத்தை அதிகாரிகளின் கவ னத்திற்கு கொண்டு செல்ல முடிவு செய்து தனது குடும் பத்துடன் பந்தய சாலை பகுதியில் உள்ள உணவு பாது காப்பு துறை அலுவலகத்துக்கு சென்று, கெட்டுப் போனதாக கூறப்படும் சிக்கன் உணவுப் பொருளுடன் நேரடியாக மனு அளித்தார். இந்த புகாரை தொடர்ந்து, கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட உணவகத்தில் ஆய்வு நடத்தி உணவுப் பொருட்களின் தரம் மற்றும் சேமிப்பு முறைகள் குறித்து விசாரணை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.</p>
