டிரம்பின் போர் வெறியால் இழுத்து மூடப்பட்ட அமெரிக்க விமான நிறுவனம்
2 May 2026, 5:48 pm

அமெரிக்காவின் பிரபல பட்ஜெட் விமான நிறுவனமான ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் டிரம்பின் போர் வெறியால் ஏற்பட்ட நிதி நெருக்கடி மற்றும் உலகளாவிய சூழல் காரணமாக இழுத்து மூடப்பட்டது.

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து தாக்குதல் நடத்தியதையடுத்து பதிலடியாக மத்திய கிழக்கில் நாடுகளில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.

மேலும், முக்கிய கடல்வழிப் பாதையான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியதையடுத்து பல்வேறு நாடுகளுக்கு செல்ல வேண்டிய கச்சா எண்ணெய் வர்த்தகம் தடைப்பட்டது. இதனையடுத்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர ஆரம்பித்தது.

இந்நிலையில், விமான எரிபொருளுக்கான செலவு இருமடங்காக அதிகரித்ததையடுத்து, குறைந்த கட்டணத்தில் சேவை வழங்கி வந்த ஸ்பிரிட் நிறுவனத்தால் இந்த திடீர் செலவை ஈடுகட்ட முடியவில்லை.

தோல்வியில் முடிந்த மீட்புத்திட்டம்

அமெரிக்க அரசு இந்நிறுவனத்தை காப்பாற்ற 500 மில்லியன் டாலர் மதிப்பிலான நிதி உதவியை வழங்க முன் வந்தது. ஆனால் கடன் கொடுத்தவர்களுடான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததாலும் நிபந்தனைகள் கடுமையாக இருந்ததாலும் இந்த மீட்புத்திட்டம் தோல்வியில் முடிந்தது.

மே 2 முதல் அனைத்து விமானப் பயணங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. முன்பதிவு செய்தவர்களுக்கு பணம் திருப்பி அளிக்கப்படும் என நிறுவனம் அறிவித்துள்ளது.