தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஸ்பெக்குலேஷன்களும் அரசியல் எதார்த்தங்களும்

18 Mar 2026, 3:34 pm
ஸ்பெக்குலேஷன்களும் அரசியல் எதார்த்தங்களும்
<p><strong>ஸ்பெக்குலேஷன்களும் அரசியல் எதார்த்தங்களும்&nbsp;</strong></p> <p>2026-ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலை ஒட்டி நிலவும் தற்போதைய அரசியல் சூழலில், கொள்கை ரீதியான விவாதங்களை விட &lsquo;நரேட்டிவ்&rsquo; எனப்படும் பிம்பக் கட்டமைப்புகளையும், &lsquo;ஸ்பெக்குலேஷன்&rsquo; எனப்படும் யூகங்களையும் முன் வைத்து நகர்த்தவே சில சக்திகள் முயற்சிக்கின்றன. மக்கள் முன் இன்று பல தேர்வுகள் இருந்தாலும், அந்தத் தேர்வுகளுக்குப் பின்னால் இருக்கும் முரண்பாடுகளை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டியுள்ளது. 1. தேசிய அரசியலும் தமிழகத் தேர்வும் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை அமெரிக்காவிடம் அடகு வைத்த ஒரு சூழலில், வெறும் 30 நாட்களுக்கு மட்டும் ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கிக் கொள்ளலாம் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பிடம் &ldquo;அனுமதி&rdquo; பெற வேண்டிய நிலையில் இன்று ஒன்றிய அரசு உள்ளது. இத்தகைய &lsquo;இரட்டை இன்ஜின்&rsquo; சர்க்கார் என்ற பிம்பத்தை முன்வைக்கும் பாஜக ஆட்சியை தமிழகம் ஏற்கத் தயாராக இருக்கிறதா ; அந்தக் கட்சியின் அமித் ஷாவை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமியை நம்பி ஆட்சியை ஒப்படைப்பதா என்ற கேள்வி எழுகிறது. 2. திரை பிம்பங்களும் அரசியல் எதார்த்தமும் மற்றொருபுறம், மேடையில் எங்கே அழ வேண்டும், எங்கே உணர்ச்சி வசப்பட வேண்டும் என்று ஸ்கிரிப்ட் எழுதி வைத்துக்கொண்டு அரசியல் செய்து விடலாம் என்ற பிம்ப அரசியல் தலை தூக்கியுள்ளது. குறிப்பாக, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் குறித்த விவாதங்கள் தற்போது பெரும் பேசுபொருளாக உள்ளன. ஆனால், அந்த விவாதங்கள் யாவும் தரவுகளின் அடிப்படையில் இல்லை, மாறாக ஊடகங்களால் கட்டமைக்கப்படும் யூக ங்களாகவே (Speculations) உள்ளன. விஜய் கட்சிக்கு 30% முதல் 60% வரை வாக்கு இருப்பதாகப் பல்வேறு தரப்பினர் கூறுகின்றனர். இது எந்தத் தேர்தலில் நிரூபிக்கப்பட்டது? தமிழகத்தின் அனைத்துத் தொகுதிகளிலும் முறையாக சர்வே எடுக்கப்பட்டதா? இவை யாவும் அரசியல் உத்திகளுக்காகப் பணம் கொடுத்து உருவாக்கப்பட்ட மிகைப்படுத்தப்பட்ட பிம்பங்களே. விஜய் கார் எப்போது வருகிறது, அவர் கருப்புக் கண்ணாடி அணிந்திருக்கிறாரா என்பது போன்ற செய்திகள் பிரேக்கிங் நியூஸாக மாற்றப்படுகின்றன. இது அரசியலை விட ஒரு சினிமா நட்சத்திரத்தின் நடமாட்டத்தையே பிரதானப்படுத்துகிறது. 3. கூட்டணிக் குழப்பங்களும் கொள்கை முரண்பாடுகளும் விஜய் தரப்பில் சொல்லப்படும் &ldquo;கூட்டணி&rdquo; செய்திகள் ஒவ்வொன்றும் சில நாட்களிலேயே நீர்த்துப் போகின்றன. அதிமுகவின் தொண்டர்கள் தன் பக்கம் வந்துவிட்டார்கள் என்று கூறுவது, அல்லது விசிக, நாம் தமிழர் கட்சிகளின் வாக்கு வங்கியைத் தன்பால் இழுப்பதாகக் கூறுவது எதார்த்தத்திற்குப் புறம்பானது.&ldquo;ஊழல் சக்திகளை ஒழிப்போம், கொள்கை எதிரிகளை வீழ்த்துவோம்&rdquo; என்று கூறிவிட்டு, பின்னர் அதே ஊழல் புகார்களுக்கு உள்ளான கட்சிகளுடன் கூட்டணி குறித்துப் பேச்சுவார்த்தை நடத்துவது அந்தத் தலைவரின் நம்பகத்தன்மையை (Credibility) கேள்விக்குறியாக்குகிறது. 4. எடப்பாடி பழனிசாமியின் வியூகம் அரசியலில் எடப்பாடி பழனிசாமி ஒரு தந்திரமான ஆட்டக்காரர். சசிகலா, டிடிவி &nbsp;தினகரன், ஓபிஎஸ் என வரிசையாக அனைவரையும் ஓரங்கட்டிவிட்டுத் தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டவர். அவர் விஜய்க்கு 50 அல்லது 80 தொகுதிகளைக் கொடுத்து விட்டு, தனது முதலமைச்சர் கனவை விட்டுக்கொடுப்பாரா? ஒருவேளை 30 தொகுதி களைக் கொடுத்துவிட்டு எடப்பாடியை முதலமைச்சராக விஜய் ஏற்றுக்கொண்டால், விஜய்யின் &lsquo;மாற்று அரசியல்&rsquo; என்ற முழக்கமே தோல்வியில் முடியாதா? இதனால் அவருக்கு கிடைக்கக்கூடிய சிறுபான்மையின வாக்குகளும் கூட பறிபோகாதா? &nbsp;சொந்தக் காலில் நிற்காமல், ஊடக வெளிச்சத்தையும் சோஷியல் மீடியா ட்ரெண்டுகளையும் மட்டும் நம்பி ஒரு கட்சி தேர்தலைச் சந்திக்க முடியாது. தனது பலத்தை நிரூபிக்காதவரை, 5% வாக்கு வங்கியைத் தாண்டுவதே இவர்களுக்குப் பெரும் சவாலாக இருக்கும். தமிழக மக்கள் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள்; அவர்கள் நடிப்பையும் அரசியலையும் பிரித்துப் பார்க்கத் தெரிந்தவர்கள். தனியார் ஊடக விவாதங்களின் போது வெளிப்படுத்திய கருத்துக்களில் இருந்து</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.