முந்தய பக்கம்

சிறப்பு மகளிர் உரிமைத் தொகை சிதம்பரத்தில் சரவெடி கொண்டாட்டம்

14 Feb 2026, 4:33 pm
சிறப்பு மகளிர் உரிமைத் தொகை  சிதம்பரத்தில்  சரவெடி கொண்டாட்டம்
<p><strong>சிறப்பு மகளிர் உரிமைத் தொகை &nbsp;சிதம்பரத்தில் &nbsp;சரவெடி கொண்டாட்டம்</strong></p> <p>சிதம்பரம், பிப்.14- தமிழகத்தில் மகளிர் உரிமை தொகை பெறுவோருக்கு மாநில அரசுசார்பில் சிறப்பு உரிமைத்தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டதை அடுத்து சிதம்பரத்தில் தி.மு.க நிர்வாகிகள் மற்றும் பெண்கள் பல்வேறு பகுதிகளில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர். இந்த அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகர மன்ற தலைவர் கே.ஆர்.செந்தில் குமார் தலைமையில் மேலரத வீதியிலும், தெற்குரதவீதியில் தி.மு.க. பொதுக் குழு உறுப்பினர் ஜேம்ஸ்.விஜய ராகவன் தலைமையில் &nbsp;நகர துணை செயலாளர் ஆர். இளங்கோ, நகரமன்ற உறுப்பினர்கள் ஏஆர்சி.மணிகண்டன், கல்பனா ஆகியோர் முன்னிலையில் திமுக நிர்வாகிகள், ஏராளமான பெண்கள் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர். மேலும் சிதம்பரம் கஞ்சித்தொட்டி பகுதியில் நகர துணை செயலர் பா.பாலசுப்பிரமணியன் தலைமையிலும், பேருந்து நிலையம் பகுதியில் மாவட்ட பிரிதிநிதி ரா.வெங்க டேசன் மையிலும், விழல்கட்டி பிள்ளை யார் கோயில் தெருவில் மாவட்ட பொறி யாளர் அணி அமைப்பாளர் அப்புசந்திர சேகர் தலைமையிலும் வெடித்து, பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டா டினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram