தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சென்னை விரைவு செய்திகள்

29 Jan 2026, 5:39 pm
சென்னை விரைவு செய்திகள்

தைப்பூசத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

கடலூர், ஜன.29 - வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞானசபையில் தைப்பூச ஜோதி தரிசன விழா பிப்ரவரி ஒன்றாம் தேதி நடக்கிறது. இந்த ஜோதி தரிசனத்தை காண உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டம், மாநிலம், நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் வருவார்கள். இந்நிலையில் அவர்களின் வசதிக்காக சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே நிர்வாகம் அறி வித்துள்ளது. அதன்படி கடலூர் துறைமுகம் ரெயில் நிலையத்தில் இருந்தும், விழுப்புரம் ரெயில் நிலையத்தில் இருந்தும் வடலூருக்கு சிறப்பு ரெயில்கள்  (ஞாயிற்றுக்கிழமை), 2 மற்றும் 3-ந் தேதிகளில் என 3 நாட்களுக்கு இயக்கப்படுகிறது. விழுப்புரத்தில் இருந்து காலை 9.05 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண் -06121)விருத்தாசலத்திற்கு 9.55 மணிக்கும், நெய்வேலிக்கு10.32 மணிக்கும் , வடலூருக்கு 10.40 மணிக்கும், குறிஞ்சிப்பாடிக்கு 10.50 மணிக்கும், கடலூர் துறைமுகத்திற்கு 11.20 மணிக்கும் வந்தடைகிறது. மறுமார்க்கத்தில் கடலூர் துறை முகத்தில் இருந்து மதியம் 11.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்-06122) குறிஞ்சிப்பாடிக்கு 11.58 மணிக்கும், வடலூருக்கு மதியம் 12.10 மணிக்கும், நெய்வேலிக்கு 12.23 மணிக்கும், ஊ.மங்கலத்திற்கு 12.29 மணிக்கும், விருத்தாசலத்திற்கு மதியம் 1 மணிக்கும் சென்றடைகிறது. இதேபோல் விருத்தாசலத்தில் இருந்து மதியம் 1.20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (வண்டி எண்-06123) ஊ.மங்கலத்திற்கு மதியம் 1.38 மணிக்கும், நெய்வேலிக்கு 1.45 மணிக்கும் , வடலூருக்கு 1.55 மணிக்கும், குறிஞ்சிப்பாடிக்கு 2.07 மணிக்கும், கடலூர் துறைமுகத்திற்கு 2.40 மணிக்கும் வந்தடைகிறது. மறுமார்க்கத்தில் கடலூர் துறை முகத்தில் இருந்து சிறப்பு ரெயில் (வண்டி எண் 06124) மதியம் 2.50 மணிக்கு புறப்பட்டு குறிஞ்சிப்பாடிக்கு 3.18 மணிக்கும், வடலூருக்கு 3.25 மணிக்கும், நெய்வேலிக்கு 3.37 மணிக்கும், ஊ.மங்கலத்திற்கு 3.46 மணிக்கும், விருத்தாசலத்திற்கு மாலை 4.10 மணிக்கும், விழுப்புரத்துக்கு மாலை 5.15 மணிக்கும் சென்றடைகிறது. இந்த ரயில்கள், முன்பதிவில்லாத ரயில்களாக இயக்கப்படுகிறது.

காடகனூர் வேளாண்  கூட்டுறவு கடன்  சங்கத்தில்  பயிர் கடன் இழுத்தடிப்பு

விழுப்புரம், ஜன.29- காடகனூர் வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் அப்பகுதி விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்காமல் இழுத்தடிக்கபடுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர். விழுப்புரம் மாவட்டம்,கண்டாச்சிபுரம் வட்டம், காட கனூர் வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் காடகனூர், தணிக்கலாம்பட்டு, கிங்கினிவாடி, அப்ப னந்தல், பில்ராம்பட்டு, வேடாளம், உள்ளிட்ட கிராமங்களில் உள்ள நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகள் கணக்கு வைத்து செயல்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இப்பருவத்தில் தங்கள் நிலங்களில் பயிர் செயதுள்ள பயிர்களுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பயிர் கடன் கேட்டு விண்ணப்பங்கள் கொடுத்து உள்ள னர். அதற்கான உரிய ஆவணங்களையும் கொடுத்து உள்ள னர், இரண்டு மாதங்கள் ஆகியும் இன்று வரை காடக னூர் வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் பயிர் கடன் வழங்கப்படாமல் விவசாயிகளை தினசரி  அலைகழித்து அலட்சியமாக பதில் கூறி திருப்பி அனுப்பி வருகின்றனர். ஆபரணங்களை அடகு வைத்தும் , வெளியில் கந்து வட்டிக்கு பணம் வாங்கி விவசாயம் செய்த விவசாயிகள் பயிர் கடன் கிடைக்காமல், வாங்கிய கடனை கொடுக்க முடியாமலும், மேலும் கடன் வாங்க முடியாமலும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு சங்கத்தில் சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்கு வதற்கு உரிய நிர்வாக அனுமதியும் நிதி ஒதுக்கிடும் செய்யாமல் கோப்புகள் மாத கணக்கில் விழுப்புரம் ஜே.ஆர் அலுவலகத்தில் தேங்கி கிடப்பதாக தகவல்களை தெரிவித்து வருகின்றனர். கடன் கேட்டு விண்ணப்பம் கொடுத்து காத்துக் கிடக்கும் காடகனூர் கூட்டுறவு கடன் சங்கத்திற்கு உட்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக பயிர் கடன் தருவதற்கு உரிய  நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும், இல்லையேல் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மையப்படுத்தப்பட்ட போராட்டத்திற்கு செல்வது தவிர வேறு வழியில்லை என்கின்றனர்.

நாளை மின் தடை

திருவண்ணாமலை, ஜன.29- திருவண்ணாமலை துணை மின் நிலையத்தில் நாளை (ஜன.31) சனிக்கிழமை அன்று பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளது. இதனால்,திருவண்ணாமலை, ஊசாம்பாடி, வடஆண்டாப்பட்டு, மலப்பாம்பாடி, வள்ளிவாகை, சானானந்தல், களஸ்தம்பாடி, குன்னுமுறிஞ்சி, கீழ்நாச்சிப்பட்டு, வேங்கிக்கால், துர்க்கைநம்மியந்தல், வடஅரசம்பட்டு, நொச்சிமலை, தென்அரசம்பட்டு, கிளியாப்பட்டு, குன்னியந்தல், சடையனோடை, சேரியந்தல் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமையன்று (ஜன.31) காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என மின் வாரிய செயற்பொறியாளர் (மேற்கு) வ.சரவணன் தெரிவித்துள்ளார். இதே போல் தாமரை நகர், ஆடையூர், மல்லவாடி, நாயுடு மங்கலம் துணை மின் நிலையங்களை சார்ந்த பகுதிகளிலும் மின்சாரம் இருக்காது எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கியை காட்டி மிரட்டிய கடலூர் அதிமுக பிரமுகர் கைது

கடலூர், ஜன.29- கடலூர் மாவட்டம், நடுவீரப்பட்டு குழந்தை குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி இவர் அதிமுகவில் மேற்கு ஒன்றிய விவசாய அணி துணை செயலாளராக உள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் வினோத் என்பவருக்கும் செம்மண் கிராவல் குவாரியில் தொழில் ரீதியாக இரு வருக்கும் பிரச்சனை இருந்து வந்த நிலையில் புதன்கிழமை கிருஷ்ணமூர்த்திக்கும் வினோத் இருவருக்கும் இடையே குவாரியில் வாக்குவாதம் ஏற்பட்டது. கிருஷ்ணமூர்த்தியின் மகன் கோபால் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளராக உள்ளார். தான் அனுமதி பெற்று வைத்திருந்த கை துப்பாக்கியை எடுத்து வினோத் என்பவரை மிரட்டி தாக்கியது சம்பந்தமாக நடுவீரப்பட்டு காவல் நிலையத்தில் அளித்த புகாரில், கோபால் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 4 பிரிவுக ளின் கீழ் வழக்கு பதிவு செய்து, அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் கோபாலை கைது செய்தனர். அவரிடமிருந்து துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை பறிமுதல் செய்தனர்.

இளைஞர் வெட்டிக் கொலை

விழுப்புரம், ஜன. 29- விழுப்புரம் மாவட்டம் சின்னகோட்டக்குப்பத்தைச் சேர்ந்த ரவுடி அப்பு (எ) ஜவகர் (24),  புதனன்று இரவு மர்மக் கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இவர் மீது 3 கொலை வழக்குகள் உட்பட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. ஜாமினில் வெளியே வந்திருந்த அவர், அமைதி நகரில் நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்தபோது 10 பேர் கொண்ட கும்பல் இந்த தாக்குதலை நடத்தியது. சம்பவ இடத்திலேயே உயிரிழந்த அவரது உடலை மீட்ட கோட்டக்குப்பம் போலீசார், முன்விரோதம் காரணமாக இக்கொலை நடந்ததா என்ற கோணத்தில் தப்பியோடிய கும்பலைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

தலைமறைவான குற்றவாளி கைது

விழுப்புரம், ஜன.29- ஆறு ஆண்டுகளாக கொலை வழக்கில் தலைமறை வாக இருந்த வரை போலீசார் கைது செய்து நீதிமன்ற பிடியாணை நிறைவேற்றினர். கடந்த 8.8.2017 ஆம் ஆண்டு பெரியதச்சூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாலை மடம் ரோட்டில் உள்ள மாணிக்கம் என்பவரது நிலத்தில் பெரியதச்சூர் கிராமத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் சடகோபன் (வயது.48) என்பவரை கொலை செய்து  கிணற்றில் வீசி சென்ற விக்கிரவாண்டி வட்டம்,ரெட்டிகுப்பம் கிராம பகுதியை சேர்ந்த மதி என்கின்ற மதியழகன் (வயது.40) கைது செய்யப்பட்டு,  வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருந்த நிலையில் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் கடந்த ஆறு ஆண்டுகளாக  தலைமறைவாக இருந்து வந்தார். இந்நிலையில் பெரியதச்சூர் காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜ் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் லியோ சார்லஸ் மற்றும் காவலர்கள் தலைமையிலான போலீசார்  மதி என்ற மதியழகன்(வயது.40) என்பவரை  கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.