தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

3 Jan 2026, 2:20 pm
கோயம்புத்தூர் முக்கிய  செய்திகள்

சிறப்பு ரயில்கள்: இன்று முன்பதிவு துவக்கம்

திருப்பூர், ஜன.3- பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஈரோடு,  திருப்பூர்,  கோவை வழியாக சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இதற்கு,  இன்று முதல் முன்பதிவு துவங்குகிறது என தெற்கு ரயில்வே  நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள  செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கோவை, திருப்பூர்,  ஈரோடு வழியாக சென்னை செல்லக்கூடிய வகையில் சிறப்பு  ரயில்கள் இயக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும்  ஜன.11 மற்றும் ஜன.18 ஆம் தேதிகளில் கோவையில் இருந்து  சென்னைக்கு (06034)  இரவு 11:30 மணிக்கு புறப்பட்டு மறுநாள்  காலை 9:50 மணிக்கு சென்றடைகிறது. இந்த ரயில் திருப்பூரில்  12 ஆம் தேதி அதிகாலை 12:10 மணிக்கும், ஈரோட்டில் 1:12 மணிக்கும் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  சென்னையில் இருந்து கோவைக்கு (06033) ஜன.12 மற் றும் ஜன.19 ஆம் தேதிகளில் இரவு 11:25 மணிக்கு சென்னை யில் புறப்பட்டு மறுநாள் காலை 9:00 மணிக்கு கோவை வந்த டைகிறது. இந்த ரயில்  அதிகாலை   காலை 6:05  மணிக்கு ஈரோட் டில், 7:00 மணிக்கு திருப்பூரில் நின்று செல்லும் என தெரிவிக் கப்பட்டுள்ளது. இதேபோல் போத்தனூரில் இருந்து சென் னைக்கு திருப்பூர்,  ஈரோடு மார்க்கமாக ஜன.14 மற்றும்  ஜன.21 ஆம் தேதிகளிலும், மங்களூரிலிருந்து சென்னைக்கு  கோவை, திருப்பூர்,  ஈரோடு மார்க்கமாக ஜன.13 ஆம் தேதியும்  சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல்  சென்னை போத்தனூர் இடையே ஜன.14 மற்றும்  ஜன.21 ஆம் தேதிகளிலும், சென்னை மங்களூர் இடையே 14  ஆம் தேதியும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த ரயில்களுக்கான முன்பதிவு இன்று (ஞாயிறு) காலை 8:00 மணிக்கு தொடங்கப்படும் என தெரிவிக் கப்பட்டுள்ளது.

கொண்டத்துக் காளியம்மன் கோயிலில் கட்டுமானப் பணி முதல்வர் தொடக்கி வைத்தார்

திருப்பூர், ஜன.3 - திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டம், பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோவிலில் ரூ.6.34 கோடி மதிப் பீட்டில் திருமாழிகை மண்டபம் கட்டும் பணியை தமிழக  முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தி லிருந்து காணொலிகாட்சி வாயிலாக சனியன்று திறந்து வைத் தார். கோயில் வளாகத்தில் இந்த நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி  மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வ ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கொண்டத்து காளியம்மன் கோயிலில் ரூ. 6.34 கோடி மதிப் பீட்டில் செதுக்கப்பட்ட கற்களைப் பயன்படுத்தி திருமாழிகை  மண்டபம் கட்டப்படவுள்ளது. ராஜ கோபுரம் முதல் நிலை ரூ.2.43 கோடி, இரண்டாம் நிலை ரூ.18 லட்சம், மூன்றாம் நிலை  ரூ.16 லட்சம், நான்காம் நிலை ரூ.14 லட்சம், ஐந்தாம் நிலை  ரூ.12 லட்சம், கோயில் உள்பிரகார வடக்கு முகம் மதில்  சுவர் ரூ.28 லட்சம், கிழக்கு முகம் ரூ.35 லட்சம், தெற்கு முகம்  ரூ.35 லட்சம், மேற்கு முகம் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்ப டவுள்ளது. மேலும், கன்னிமூலை விநாயகர் சன்னதி ரூ.23.50 லட்சம்,  முத்துக்குமாரசாமி ஏகதல விமானம் ரூ.24.75 லட்சம், வசந்த  மண்டபம் ரூ.2.42 கோடி, கன்னிமார் சன்னதி ரூ.2.50 லட்சம்,  திருமடப்பள்ளி ரூ.3.50 லட்சம், உள் கல்தரைதளம் அமைப்பு  ரூ.50 லட்சம், கோயில் வெளிப்பிரகார மதில் சுவர் பூசுதல் வர் ணம் அடித்தல் ரூ.32.50 லட்சம், பொங்கல் வைக்கும் மண்ட பம் ரூ.14.50 லட்சம், குண்டம் இறங்குவோருக்கான இளைப் பாறும் மண்டபம் ரூ.1.10 கோடி, தீப ஸ்தம்பம் மற்றும் குறிஞ்சி  மண்டப கல்காரப்பணி ரூ.12.50 லட்சம், பொருட்கள் பாது காப்பு அறை ரூ.14.50 லட்சம், மின்சார பாதுகாப்பு அறை  ரூ.6.75 லட்சம், முடி காணிக்கை செலுத்தும் இடம் ரூ.10.50  லட்சம் என மொத்தம் ரூ.6.34 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட வுள்ளதாக திருப்பூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

துரித உணவு, கேக் தயாரிக்க பயிற்சி

திருப்பூர், ஜன. 3 - திருப்பூர் காங்கயம் ரோடு, முதலிப்பாளையம் பிரிவில் உள்ள கனரா வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி    நிலையத்தில் துரித உணவு, தினை மற்றும் கேக் பொருட்கள்  தயாரிப்புக்கு 12 நாள் முழு நேரப்பயிற்சி ஜனவரி 7 அன்று நடை பெறவுள்ளது. எழுத படிக்க தெரிந்த,18 முதல் 45 வயதுக்குட் பட்ட,  இருபாலரும்    விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கு எவ்விதக்  கட்டணமும் இல்லை. இரு பாலருக்கும் தனித்தனி தங்கும்  விடுதி வசதி உள்ளது. உணவு இலவசமாக வழங்கப்படும்.பயிற்சிக்கு விண்ணப்பிக்க “கனரா வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையம், 335/பி1, வஞ்சியம்மன் கோவில்  எதிரில், முதலிபாளையம் பிரிவு, காங்கேயம் சாலை, திருப்பூர்  என்ற முகவரிக்கு நேரில் வர வேண்டும். கூடுதல் விவரங்க ளுக்கு தொலைபேசி: 9489043923, 9080442586, 9952518441, 8610 533436 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என பயிற்சி  நிலைய இயக்குனர் சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.

ஜன.9 விவசாயிகள் குறைதீர் கூட்டம்

திருப்பூர், ஜன.3- திருப்பூர் வருவாய் கோட் டத்தில் கோட்ட அளவிலான  விவசாயிகள் குறை தீர்க்கும்  நாள் கூட்டம் ஜன.9 தேதி 11  மணிக்கு திருப்பூர் மாவட் டம், திருப்பூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவல கத்தில் நடைபெறவுள்ளது. இந்த விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு திருப்பூர் வருவாய் கோட்டாட்சியர் சிவபிரகாஷ் தெரிவித்துள் ளார்.

நடக்க இருப்பவை

திருப்பூர்  வாசகர் சிந்தனைப் பேரவை நூல் அறிமுகம் 36 ஆம் நிகழ்வு 4.01.2025, ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி கே.வி.டிரான்ஸ்போர்ட் ஏவிபி மெயின்ரோடு, அங்கேரிபாளையம், திருப்பூர் சமூக ஜனநாயகக் கையேடு நூலை அறிமுகப்படுத்தி உரை: பேராசிரியர் வ.கிருஷ்ணன் (முதல்வர், சிக்கண்ணா கல்லூரி) ஏற்புரை: பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு (பொதுப்பள்ளிக்கான மாநில மேடை)

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.