முந்தய பக்கம்

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவும் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி

24 Feb 2026, 3:55 pm
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவும்  ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி
<p><strong>மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவும் &nbsp;ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி</strong></p> <p>திருப்பூர், பிப்.24- 10 மற்றும் 12 ஆம் வகுப்பு &nbsp;மாற்றுத் திறனாளி மாணவர் களுக்கு தேர்வு எழுத உத வும், ஆசிரியர்களுக்கு செவ் வாயன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. &nbsp;தமிழ்நாடு முழுவதும் &nbsp;2025-26ம் கல்வியாண்டிற் கான 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வரும் மார்ச் 2 மற்றும் 11 ஆம் தேதிகளில் துவங்குகிறது. திருப்பூர் மாவட்டத்தில் 12 &nbsp;ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 93 மையங்க ளில் 26,461 பேர் எழுத உள்ளனர். 10 ஆம் &nbsp;வகுப்பு பொதுத் தேர்வை 104 மையங்களில் &nbsp;29,044 பேர் எழுத உள்ளனர். பொதுத்தேர்வை எழுத உள்ள மாற்றுத் திறனாளிகள் உட்பட &nbsp;உடல் பாதிப்பு காரணமாக சுயமாக தேர்வு &nbsp;எழுத முடியாதவர்களுக்கு சொல்வதை எழுத ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்சி &nbsp;மாணவ மாணவிகள் நியமிக்கப்பட்டுள்ள னர். அவர்களுக்கான சிறப்பு பயிற்சி திருப்பூர் &nbsp;மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வா யன்று நடைபெற்றது. இதில், மாவட்ட ஆசி ரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதுநிலை &nbsp;விரிவுரையாளர் பாபி இந்திரா தேர்வு எழுதும் &nbsp;ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பயிற்சி மாணவ மாணவியர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். திருப்பூர் மாவட்டத்தில் 12 ஆம் &nbsp;வகுப்பில் &nbsp;சுயமாக தேர்வு எழுத முடியாதவர்க ளாக 116 பேர் உள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram