விழுப்புரம் வழியாக ஆந்திராவுக்கு சிறப்பு ரயில்
3 Sept 2026, 12:56 am

விழுப்புரம் வழியாக ஆந்திராவுக்கு சிறப்பு ரயில்

விழுப்புரம், செப்.2-தூத்துக்குடியில் இருந்து விழுப்புரம் வழியாக ஆந்திர மாநிலம் நரசாபூருக்கு சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயில் (வண்டி எண் 06019) வருகின்ற 7-ம் தேதி (திங்கள்கிழமை) தூத்துக்குடியில் இருந்து இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு 9-ம் தேதி (புதன்கிழமை) அதிகாலை 12.20 மணிக்கு நரசாபூரை சென்றடைகிறது. அதேபோல் மறுமார்க்கத்தில் நரசாபூரில் இருந்து 9-ம் தேதி (புதன் கிழமை) அதிகாலை 4 மணிக்கு புறப்படும் ரயில் (வண்டி எண் 06020) மறு நாள் (வியாழக்கிழமை) அதி

காலை 4.30 மணிக்கு-தூத்துக் குடியை சென்றடைகிறது.

இந்த ரயில்கள் கட லூர் திருப்பாதிரிப்புலியூர், பண்ருட்டி, விழுப்புரம், சென்னை எழும்பூர், நாயுடு பேட்டா, நெல்லூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.