தீக்கதிர் முக்கிய செய்திகள்
23 Nov 2025, 3:44 pm

சென்னையிலிருந்து வாரணாசிக்கு சிறப்பு ரயில்

சென்னை: உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் டிசம்பர் 2 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை ‘காசி தமிழ் சங்கமம் 4.0’ நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதை யொட்டி, சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பில், “சென்னை சென்ட்ரலில் இருந்து டிசம்பர் 2 ஆம் தேதி அதிகாலை 4.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் இரவு 11.15 மணிக்கு வாரணாசி சென்ற டையும். வாரணாசியில் இருந்து டிச.7 அன்று இரவு 11 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் டிச.9 அன்று இரவு 11.30 மணிக்கு சென்ட்ரல் வந்தடையும். இதுபோல சென்ட்ரலில் இருந்து டிச.6 அன்று அதி காலை 4.15 மணிக்கு புறப்படும் ரயில், டிச.7 அன்று இரவு 11.15 மணிக்கு வாரணாசி சென்றடையும். மறு மார்க்கமாக பனாரசில் இருந்து டிசம்பர் 11 அன்று இரவு 11 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் டிச.13 அன்று இரவு 11.30 மணிக்கு சென்ட்ரல் வந்தடையும். சென்னை சென்ட்ரலில் இருந்து டிச.12 அன்று அதி காலை 4.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் டிச.13 அன்று இரவு 11.15 மணிக்கு வாரணாசி சென்றடையும். மறு மார்க்கமாக வாரணாசியில் இருந்து டிச.7 அன்று இரவு 11 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் டிச.19 அன்று இரவு 11.30 மணிக்கு சென்ட்ரல் வந்தடையும் என கூறப்பட்டுள்ளது.

டிச.10 அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம்

சென்னை: அதிமுக பொதுக் குழு மற்றும் செயற்குழு கூட்டம் டிசம்பர் 10 ஆம் தேதி நடைபெறும் என்று கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்க டாசலபதி மண்டபத்தில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. அதிமுக அவைத் தலை வர் தமிழ்மகன் உசேன் தலைமையில் பொதுக் குழு கூட்டம் நடைபெ றும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

இன்று தண்டனை அறிவிப்பு

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான சுதர்ச னம், பவாரியா கொள்ளை யர்களால் சுட்டுக் கொல்லப் பட்ட வழக்கில் தொடர்பு டைய 3 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட நிலையில் அவர்களுக் கான தண்டனை விவரங் களை சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் திங்கட் கிழமை (நவ.24) அறி விக்கிறது.

மொபைல் ஏடிஎம் சேவை பழனி:

பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் வசதிக்காக மலை அடி வாரப் பகுதியில் மொபைல் ஏடிஎம் சேவை தொடங் கப்பட்டது. சபரிமலை சீசன் தொடங்கி உள்ளதால் பழனிக்கு அதிகமான பக்தர்கள் வருவார்கள் என்பதால் இந்த வசதி தொடங்கப்பட்டுள்ளது.

டிச.1 முதல் பார்வையிடலாம் கோவை

: கோவை செம்மொழி பூங்காவை டிசம்பர் 1 ஆம் தேதி முதல் பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் கே.என் நேரு தெரிவித்தார். கோவை காந்திபுரத்தில் சனிக்கிழமை செய்தியா ளர்களிடம் அவர் கூறுகை யில், “கோவை செம்மொழி பூங்காவை நவ.25 ஆம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக் கிறார். செம்மொழி பூங் காவை பொதுமக்கள் பார்வையிட கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு டிசம்பர் 1 ஆம் தேதி முதல் அனுமதிக் கப்படுவார்கள்” என்றார்.