கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
16 Jan 2026, 3:00 pm

கோட்டயம் - பெங்களூரு இடையே சிறப்பு ரயில்

கோவை, ஜன.15- பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, கோட்டயம் மற்றும் பெங்க ளூரு கண்டோன்மென்ட் இடையே சிறப்பு ரயில்கள் இயக் கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதன்படி, வண்டி எண் 06147 கொண்ட கோட்டயம் - பெங்களூரு கண் டோன்மென்ட் சிறப்பு ரயில் வரும் ஜனவரி 18 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கோட்டயத்தில் இருந்து மதியம் 12.30 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 03.30 மணிக்கு பெங்களூரு சென்றடையும். மறுமார்க்கமாக வண்டி எண் 06148 கொண்ட பெங்களூரு கண்டோன்மென்ட் - கோட்டயம் சிறப்பு ரயில் ஜனவரி 19 ஆம் தேதி (திங்கட்கிழமை) இரவு 10.20 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 10.50 மணிக்கு கோட்டயத்தைச் சென்றடை யும். இந்த ரயில்கள் எர்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், குப்பம், பங்காரப்பேட்டை மற்றும் கிருஷ்ணராஜபுரம் ஆகிய முக்கிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இதற்கான முன்பதிவு இன்று (ஜன.16) மதியம் 12.00 மணிக்குத் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ விபத்து

கோவை, ஜன.16- கோவை, பொள்ளாச்சி ரோடுஎல்ஐசி காலனி பகுதி யில் ராமச்சந்திரன் என்பவர், பழைய பிளாஸ்டிக் பொருட் கள் மற்றும் பேப்பர் களை விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில், பொங்கல் பண்டிகை விடுமுறையை ஒட்டி கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளனர். வெள்ளி யன்று அந்த கடையில் மின் சார கசிவு காரணமாக தீ பற்றி உள்ளது. அருகில் இருந்தவர்கள் உடனடியாக தீயணைப்புத்துறையின ருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்த னர்.

குளித்து மகிழ்ந்த யானை கூட்டம்

பொள்ளாச்சி, ஜன.16- பொள்ளாச்சி அடுத்த பரம்பிக்குளம் அணைப்பகுதியில் குளித்து மகிழ்ந்த யானை கூட்டத்தின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பொள்ளாச்சி அருகே உள்ள டாப்ஸ்லிப், பரம்பிக்குளம், தூனாக்கடவு, பெருவாரி பள்ளம் உள்ளிட்ட பகுதி அடந்த வனப்பகுதியில் இருப்பதால் புலி, யானை, காட்டுமாடு, சிறுத்தை, செந்நாய், புள்ளிமான் போன்ற வன விலங்குகள் அதிகமாக இருக்கிறது. இவற்றைக் காண்பதற்காக தமிழ்நாடு மற்றும் கேரளம் வனத்துறை சுற்றுலாப் பயணிகளை அழைத் துச் செல்ல வேன் சவாரி மூலம் அனைத்து பகுதியும் சுற்றிப் பார்க்க குறிப்பிட்ட கட்டணம் வசூல் செய்து அழைத்துச் செல் கின்றனர். இந்நிலையில், வெள்ளியன்று சுற்றுலாப் பயணி களை வேன் சவாரி மூலம் பரம்பிக்குளம் அருகே உள்ள எர்த் டேம் பகுதியில் சென்றபோது, வெயிலின் தாக்கம் அதிக மாக இருந்ததால் அவற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள ஆண் யானை உட்பட பெண் யானைகளுடன் கூட்டமாக குளித்துக் கொண்டிருந்தது. அப்போது யானை கூட்டத்தை பார்த்த மற்றொரு பெண் யானை இருங்கடா நானும் வருகிறேன் என்றது போல் அதிவேகமாகச் சென்று கூட்டத்து டன் குளித்து மகிழ்ந்தது. இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.