சிறப்பு டெட் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு, கையேடுகளை உடனடியாக வழங்க வேண்டும் முதல்வருக்கு ஆசிரியர் கூட்டணி கோரிக்கை
5 Jun 2026, 1:50 am
<p><strong>சிறப்பு டெட் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு, கையேடுகளை உடனடியாக வழங்க வேண்டும் முதல்வருக்கு ஆசிரியர் கூட்டணி கோரிக்கை</strong></p><p>மதுரை, ஜூன் 4- அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரி யர்களுக்காக நடைபெற உள்ள சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக, தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் மற்றும் கையேடுகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு முதல மைச்சரின் தனிப்பிரிவுக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மதுரை மாவட்டச் செயலாளர் பெ. சீனிவாசகன் மனு அனுப்பியுள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: 2025 செப்டம்பர் 1-ஆம் தேதி வழங் கப்பட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பில், பணி யில் உள்ள ஆசிரியர்கள் 2 ஆண்டு களுக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியதுடன், 2 ஆண்டுகள் என்ற கால அவகாசத்தை 3 ஆண்டு களாக நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையில், தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தற்போது பணி யாற்றி வரும் ஆசிரியர்களுக்கான சிறப்பு டெட் தேர்வு வருகிற ஜூலை மாதம் நடைபெற உள்ளது. இந்தத் தேர்விற்காக மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (எஸ்சிஇ ஆர்டி) மூலம் பயிற்சி வகுப்புகள் மற்றும் கையேடுகள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால், தற்போது வரை சிறப்பு டெட் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு களோ, கையேடுகளோ ஆசிரியர் களுக்கு வழங்கப்படவில்லை. தேர்வு தேதி நெருங்கி வரும் நிலையில், தேர்வை எழுதவுள்ள அனைத்து ஆசிரி யர்களுக்கும் சிறப்பு பயிற்சி மற்றும் கையேடுகளை போர்க்கால அடிப்படை யில் உடனடியாக வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.</p>
