முந்தய பக்கம்

பாலின சமத்துவம் சிறப்பு கருத்தரங்கு

15 Dec 2025, 5:05 pm
பாலின சமத்துவம் சிறப்பு கருத்தரங்கு
<p><strong>பாலின சமத்துவம் சிறப்பு கருத்தரங்கு</strong></p> <p>திருப்பூரில், டிச.15- பாலின சமத்துவத்தின் மூலம் தனிமனித &nbsp;வளர்ச்சி, குடும்ப வளர்ச்சி, &nbsp;சமுதாய வளர்ச்சி &nbsp;ஏற்படும் என பாலின சமத்துவம் சிறப்பு கருத்த ரங்கில் பிசப்&rsquo;ஸ் நர்சிங் கல்லூரி பொறுப்பு முதல்வர் லெட்சுமிப்பிரியா தெரிவித்தார். திருப்பூர், சிக்கண்ணா அரசு கலைக்கல் லூரி பாலின உளவியல் கண்காணிப்பு மற்றும் &nbsp;விழிப்புணர்வு மன்றத்தின் சார்பில் &lsquo;பாலின சமத்துவம்&rsquo; பற்றிய சிறப்பு உரையாடல் நிகழ்ச்சி திங்களன்று நடைபெற்றது. கல்லூரி &nbsp;முதல்வர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் வணிகவியல் துறை தலைவர் அமிர்த ராணி வரவேற்றார். பேராசிரியர் விநாயகமூர்த்தி வாழ்த்தி பேசினார். தாராபுரம் பிசப்&rsquo;ஸ் நர்சிங் கல்லூரி பொறுப்பு முதல்வர் லெட்சு மிப்பிரியா சிறப்பு விருந்தினராக கலந்து பேசு கையில், பாலியல் வன்கொடுமை மற்றும் கொத்தடிமை ஒழிய பாலின சமத்துவம் பற்றிய புரிதல் அவசியம். பாலின சமத்து வத்தின் மூலம் தனிமனித வளர்ச்சி, குடும்ப &nbsp;வளர்ச்சி, &nbsp;சமுதாய வளர்ச்சி ஏற்படுவதோடு, &nbsp;நம் நாடும் வளர்ந்த நாடாக மாறும் என் றார். இதைதொடர்ந்து பாலின சமத்துவம் குறித்த உறுதி மொழி எடுக்கப்பட்டது. இதை யடுத்து கல்லூரியின் அகப்புகார் குழுவின் &nbsp;மூலம் இளம் பெண்கள் எதிர்கொள்ளும் பாலி யல் துன்புறுத்தல்கள் மற்றும் சவால்கள் குறித்து அதன் ஒருங்கிணைப்பாளர் பாலா மணி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் நாய்களால் ஏற்படும் அச்சுறுத்தல்கள் குறித் தும், நாய்களுக்கு உணவளிப்பதைத் தவிர்க்குமாறும் &nbsp; உடற்கல்வி இயக்குனர் ராஜாராம் எடுத்துரைத்தார். உறுப்பினர்கள் நூலகர் சித்ரா தவப்புதல்வி பெனாசிர், &nbsp;பர்வின்பானு, சுதா, மீனாட்சி, சத்யா, சுமதி, &nbsp;செல்வத்தரங்கினி உள்ளிட்ட ஏராளமான பேராசிரியப் பெருமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram