திருச்சி விரைவு செய்திகள்
1 Feb 2026, 3:51 pm

அரசியலமைப்பு சட்ட சிறப்பு கருத்தரங்கம்

நாகப்பட்டினம், பிப்.1 - தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் கிளை சார்பில் அரசிய லமைப்பு சட்ட சிறப்பு கருத்த ரங்கம் சனிக்கிழமை கிளையின் தலைவர் ஆ. வீரமணி தலைமையில் நடைபெற்றது. கிளைச் செயலாளர் முனைவர் சீ.ப்பி. செல்வம் வரவேற் றார். “அரசியலமைப்பு சட்ட முகவுரையின் மாண்பு கள்” என்ற தலைப்பில் மாவட்டப் பொருளாளர் தேவகி மைந்தன் கருத்துரை ஆற்றினார். சிறுமிக்கு பாலியல் தொந்தரவு

முதியவருக்கு 8 ஆண்டுகள் சிறை'

தஞ்சாவூர், பிப்.1 - தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தில்லைஸ் தானத்தை சேர்ந்தவர் ரமேஷ் (62). கோவிலுக்கு பிரசாதம் தயார் செய்யும் சமையல் தொழிலாளி யான இவர், கடந்த 2025 ஜனவரியில் 9 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொந் தரவு கொடுத்தார். இதுகுறித்து திருவையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து ரமேஷை கைது செய்தனர். இது தொடர்பாக தஞ்சாவூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி ஜெ.தமிழ ரசி விசாரித்து ரமேஷூக்கு 8 ஆண்டுகள் சிறை தண்ட னையும், ரூ.5 ஆயிரம் அப ராதமும் விதித்து வெள்ளிக் கிழமை தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறு மிக்கு இழப்பீட்டுத் தொகை யாக அரசிடமிருந்து ரூ.2 லட்சம் பெற்றுத் தரவும் நீதிபதி உத்தரவிட்டார்.

வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாக ரூ.1.35 கோடி மோசடி

மூவர் மீது வழக்கு தஞ்சாவூர், பிப்.1 - தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே தொண்டராம்பட்டு கிராமத் தைச் சேர்ந்தவர் ஆர். விமல். இவர் வெளிநாட் டுக்கு வேலைக்கு செல்ல முயற்சி செய்து கொண்டிருந் தார். இவரது நண்பர் ஒரு வர் மூலம் சென்னையைச் சேர்ந்த பிரசன்னா அறி முகம் ஆனார். பிரசன்னா கனடா, நியூ சிலாந்து ஆகிய நாடுகளுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்பி வைப்பதாகவும், அங்கு மாதம் பல லட்சம் சம்பளத்தை இளைஞர்கள் வாங்கி வருவதாகவும் ஆசை வார்த்தை கூறியு உள்ளார். இதை நம்பிய விமல் மற்றும் 57 பேர் பிரசன்னா, அவரது மனைவி வசுமதி மற்றும் ரித்தீஷ் ஆகியோரிடம் சென்னைக்கு சென்று, கடந்த 2.5.2024 முதல் 20.12.2024 வரை ரூ.1,35,55,000 பணத்தை கொடுத்துள்ளனர். அதன்பிறகு பணம் கொடுத்தவர்கள் வெளி நாட்டுக்கு எப்போது அனுப் புகிறீர்கள் என கேட்ட போது, பிரசன்னா முறை யாக பதில் அளிக்காமல், பணம் கொடுத்தவர்களை மிரட்டியுள்ளார். இதை யடுத்து விமல் தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவு காவ‌ல்துறை‌யில் புகார் செய்தார். புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் சுப்பிர மணியன், பிரசன்னா உள்ளிட்ட மூவர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசா ரித்து வருகின்றனர்.

பிப்.12 பொது வேலைநிறுத்தத்தை விளக்கி திருவாரூரில் பிரச்சாரம் நடத்த முடிவு

திருவாரூர், பிப்.1 - மக்கள் விரோத ஒன்றிய பாஜக அரசின் தொழிலாளர் விரோத 4 சட்டத் தொகுப்புகளை திரும்பப் பெற வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள், ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பாக பிப்ரவரி 12 அன்று அகில இந்திய பொது வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. இதையொட்டி திருவாரூர் மாவட்ட அலுவலகத்தில் சனிக்கிழமை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் கே.குணசேகரன் தலைமை வகித்தார். கூட்டத்தில் எஸ்கேஎம் மாவட்ட நிர்வாகிகள் எம்.சேகர், பி.கந்தசாமி, ஜி.பவுன்ராஜ், சிஐடியு மாவட்டச் செயலாளர் எம்.கே.என்.அனிபா, மாவட்ட துணைத் தலைவர் டி.வீரபாண்டியன், மாநிலக் குழு உறுப்பினர் இரா.மாலதி, ஏஐடியுசி மாவட்ட நிர்வாகிகள் புலிகேசி, தியாகராஜன், தொமுச மா.தமிழரன், இரா.ராஜாஜி, ஐஎன்டியுசி மாலதி, ராஜிவ்காந்தி மற்றும் அனைத்து அமைப்பின் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பிப்.12 அன்று திருவாரூர், திருத்துறைப்பூண்டி மற்றும் மன்னார்குடி என மூன்று மையங்களில் மறியல் நடைபெறும். பிப்.8 அன்று திருவாரூரிலும், பிப்.9 அன்று திருத்துறைப்பூண்டி மற்றும் பிப்.10 அன்று மன்னார்குடியில் போராட்டத்தை விளக்கி பிரச்சாரம் நடத்துவது. திருவாரூர் புதிய ரயில் நிலையத்திலிருந்து பேரணியாக சென்று தலைமை தபால் நிலையத்தில் மறியல் போராட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

காவலர் வீட்டில் 35 பவுன் நகை திருட்டு: ஜார்க்கண்ட் மாநில பெண் கைது

புதுக்கோட்டை, பிப்.1 - காவலர் வீட்டில் 35 பவுன் தங்க நகை களைத் திருடிச் சென்ற ஜார்க்கண்ட் மாநிலத் தைச் சேர்ந்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை கம்பன் நகரைச் சேர்ந்த வர் கலைராஜன், பழைய பேருந்து நிலையப் பகுதியில் கணினி நிறுவனம் நடத்தி வரு கிறார். இவரது மனைவி அபர்ணா, திருமயம் காவல் நிலையத்தில் தலைமைக் காவல ராகப் பணிபுரிந்து வருகிறார். கடந்த வியாழக்கிழமை இவர்கள் இருவ ரும் பணிக்குச் சென்றுவிட்ட நிலையில், வீட்டில் கலைராஜனின் தாய் தமிழ்ச்செல்வி மட்டும் இருந்துள்ளார். வீட்டின் பின்புறம் வேலை பார்த்துக் கொண்டிருந்த அவர், வீட்டுக் குள் ஏதோ சப்தம் கேட்டதையடுத்து வந்து பார்த்த போது, பீரோ திறந்திருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பீரோவுக்குள் வைக்கப்பட்டிருந்த 35 பவுன் தங்க நகைகள் திருடு போயிருந்தன. இதுகுறித்து தகவல் தெரிவித்ததை அடுத்து மகன் கலைராஜன், மருமகள் அபர்ணா ஆகி யோர் வந்து பார்த்துவிட்டு, நகரக் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து நகரக் காவல் துணைக் கண்கா ணிப்பாளர் இரா. பிருந்தா வழிகாட்டுதலில், நகரக் காவல் ஆய்வாளர் சுகுமார் தலைமை யில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் பணி நடைபெற்றது. வீட்டின் பீரோவில் இருந்த கைரேகை களைப் பதிவு செய்து ஆய்வு செய்ததில், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த கீரன்ஜானி (28) என்ற பழைய குற்றவாளியின் கைரேகை யுடன் ஒத்துப்போனது. ஏற்கனவே இவர் மீது சேலம் பகுதியில் நடைபெற்ற திருட்டுச் சம் பவங்களில் தொடர்பு இருந்ததால், காவல் துறையினரின் பதிவேடுகளில் இருந்து இவர் அடையாளம் காணப்பட்டார். இதைத் தொ டர்ந்து வேலூரில் தங்கியிருந்த கீரன்ஜானியை தனிப்படை போலீசார் சனிக்கிழமை கைது செய்து புதுக்கோட்டை அழைத்து வந்தனர். அவரிடம் இருந்து 35 பவுன் தங்க நகை கள், 100 கிராம் வெள்ளி, ரூ.50 ஆயிரம் ரொக்க மும் பறி்முதல் செய்யப்பட்டது. பின்னர் குற்ற வியல் நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், புதுக்கோட்டை மாவட்டச் சிறையில் அடைக்கப்பட்டார்.

கல்லூரி மாணவர்களுக்கு நாளை கந்தர்வன் கதை சொல்லுதல் போட்டி

புதுக்கோட்டை, பிப்.1 - பிப்ரவரி 7 அன்று நடைபெற உள்ள கந்தர்வன் நினைவு கலை இரவையொட்டி, கல்லூரி மாணவர்களுக்கான, கந்தர்வன் கதைகள் சொல்லுதல் போட்டி பிப்.03 (செவ்வாய்) அன்று புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெறுகிறது. இதுகுறித்து போட்டி ஒருங்கிணைப்பாளர் பேரா.சா.விஸ்வநாதன் தெரிவிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கலை-அறிவியல் கல்லூரி மாண வர்களுக்கான கந்தர்வன் நினைவு கலை இரவு, கந்தர்வன் கதைகள் சொல்லுதல் போட்டி, 3.2.2026 (செவ்வாய்) அன்று கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கல்லூரியில் நடைபெறவுள்ளது. முதல் கட்ட போட்டி 12 கல்லூரிகளில் நடைபெற்று, ஒவ்வொரு கல்லூரியிலும் இருவர் தெரிவு செய்யப் பட்டுள்ளனர். அவர்கள் 3.2.2026 அன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் கலந்து கொள்கின்றனர். போட்டி யில் வெற்றி பெறுகிறவர்களுக்கு முதல் பரிசு-ரூ.5000, இரண்டாம் பரிசு-ரூ.3000, மூன்றாம் பரிசு-ரூ.2000 மற்றும் ஆறுதல் பரிசாக ஐவருக்கு தலா ரூ.1000/- வீதம் வழங்கப் படவுள்ளது. பரிசுத் தொகை மற்றும் சான்றிதழ் பிப்ரவரி 7 அன்று புதுக்கோட்டை நகர்மன்ற வளாகத்தில் நடைபெறு கலை இரவில் சிறப்பு விருந்தினர்களால் வழங்கப்படும்” என்றார்.

கியூட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

திருவாரூர், பிப்.1 - இந்தியா முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழ கங்களில் 2026-27 ஆம் கல்வியாண்டு இளநிலை படிப்புகளில் சேருவதற்கான ‘கியூட்’ (CUET-UG) பொது நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவ காசத்தை தேசிய தேர்வு முகமை நீட்டிப்பு செய்துள்ளது. இதன்படி, திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்திலும் மாணவர்கள் பிப்ரவரி 4 ஆம் தேதி வரை ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும், விண்ணப்பக் கட்ட ணத்தைச் செலுத்த பிப்.7 ஆம் தேதி கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள பிப்.9 முதல் 11 ஆம் தேதி வரை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்களுக்கு உதவும் வகையில் திருவாரூ ரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் ஆன்- லைன் விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய சிறப்பு முகாம் களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை பயன் படுத்திக் கொள்ளுமாறு மத்திய பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பட்டுக்கோட்டை கோட்டத்தில் கோழி கழிச்சல் தடுப்பூசி முகாம்

தஞ்சாவூர், பிப்.1 - பட்டுக்கோட்டை கோட்டத்தில் இரு வார கோழி கழிச்சல் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து கால்நடைத்துறை உதவி இயக்குநர் மரு இ.விஜயராகவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ராணிகட் நோய் எனப்படும் வெள்ளை கழிச்சல் நோய் கோழிகளைத் தாக்கும் மிக மோசமான நோய். இது குளிர்காலத்தில் அதிகம் பரவக்கூடியது. பிறந்த, 8 வாரமான கோழிக் குஞ்சுகளுக்கு இதற்கான தடுப்பூசியை கட்டாயம் செலுத்த வேண்டும். தவறினால் நோய் பாதிக்கப்பட்ட இரண்டு நாள்களில் குஞ்சுகள் இறக்க நேரிடும். பெரிய கோழிகள் என்றால், வாதம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதுடன், முட்டை இடுவதிலும் பிரச்சனை ஏற்படும். இதர கோழிகளுக்கும் பரவும் என்பதால், கோழி வளர்ப்பவர்களுக்கு தேவை யற்ற பொருளாதார இழப்பையும் ஏற்படுத்தும். பிராய்லர் கோழிகளைப் பொறுத்தவரை, பண்ணையாளர்களே அவற்றுக்கு தடுப்பூசி செலுத்தி பராமரித்துக் கொள்கின்ற னர். எனவே, நாட்டுக்கோழிகள் மற்றும் வீடுகளில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு தடுப்பூசி மிக அவசியம். வெள்ளை கழிச்சல் நோயால் கோழிகளுக்கு 90 சதவீதம் இறப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதிலிருந்து கோழிகளை பாதுகாக்க சனிக்கிழமை தோறும் கால்நடை மருந்தகங்களில் இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்தின் முதல் இரண்டு வாரங்கள் வெள்ளை கழிச்சல் நோய்க்கான தடுப்பூசி செலுத்த சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. பட்டுக்கோட்டை கோட்டத்தில் உள்ள 27 கால்நடை மருந்தகங்கள் மற்றும் 2 கால்நடை கிளை நிலையம் மூலம் நடத்தப்படும் முகாம்களை பயன்படுத்தி தடுப்பூசி போட்டு பயன்பெறலாம்” என தெரிவித்துள்ளார்.

உதவித்தொகையை உயர்த்தி தருக! பிப்.10, 11, 12 தொடர் மறியல்

தஞ்சாவூர், பிப்.1 - தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்டக் குழு கூட்டம், மருத்துவக் கல்லூரி சாலையில் மாவட்டத் தலைவர் டி.கஸ்தூரி தலைமை யில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் டி.வில்சன் வழிகாட்டினார். மாவட்டச் செயலாளர் பி.எம். இளங்கோவன் வேலை அறிக்கை வாசித்தார். இக்கூட்டத்தில், மாவட்டத் துணைத் தலைவர்கள் பழ.அன்புமணி, கோவி.ராதிகா மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர்கள் தங்களது ஆலோசனை களை வழங்கினர். இக்கூட்டத்தில், பிப்ரவரி 10, 11, 12 ஆகிய தேதிகளில் நடைபெறக் கூடிய உதவித்தொகை உயர்வுக்கான தொடர் மறியல் போராட்டத்தை தஞ்சை பழைய பேருந்து நிலை யம் அருகில் நடத்துவது. இதில், மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களில் இருந்தும் சுமார் 1,700 மாற்றுத்திறனாளிகளை திரட்டுவது, அந்தந்த இடைக்கமிட்டி களை ஒருங்கிணைத்து பேசி கிளைகள் தோறும் கூட்டங் களை நடத்தி உறுதிமொழி ஏற்பது என முடிவு செய்யப் பட்டது. இனி வரும் காலங்களில் சங்கத்தின் மாவட்டக் குழு கூட்டத்தை ஒவ்வொரு ஒன்றியங்களிலும் நடத்துவது எனவும், முதல் கூட்டத்தை திருவோணம் ஒன்றியத்தில் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

சிறுமியிடம் முறைகேடாக நடந்து கொண்ட 7 பேர் போக்சோ வழக்கில் கைது

கும்பகோணம், பிப்.1- 17 வயது சிறுமியிடம் முறைகேடாக நடந்து கொண்ட 7 பேரை, காவல்துறை யினர் போக்சோ வழக்கில் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு, கடந்த 2022 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த அப்பு (எ) எஸ். சுரேந்தர் பாண்டியன் என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் அந்த நட்பு காத லாக மாறியுள்ளது. இதையடுத்து சுரேந்தர்பாண் டியன், அந்த சிறுமியிடம் முறைகேடாக நடந்துள்ளார். பின்னர் இருவரும் பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அந்த சிறுமியிடம் புண்ணிய நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த மணிமாறன் (20) என்பவர் கடந்த 2025 ஆம் ஆண்டு முதல் நெருங்கி பழகி வந்துள்ளார். பசுபதிகோவி லைச் சேர்ந்த சுதன் (24) என்ற ஜெயசுதனு டன் அந்த சிறுமி பழக்கம் வைத்துள்ளார். ஒருவருக்கு தெரியாமல் மற்றொருவருடன் அந்த சிறுமி பழகி வந்துள்ளதாகக் கூறப் படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக அந்த சிறுமிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து, அவரது பெற்றோர் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரி வித்துள்ளனர். இதனால், பெற்றோர் அதிர்ச்சியடைந்து சிறுமியிடம் விசாரித்த போது மணிமாறன் மற்றும் ஜெயசுதன் ஆகி யோர் தன்னிடம் முறைகேடாக நடந்து கொண்டதாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, குழந்தைகள் பாதுகாப்பு கமிட்டி அதிகாரிகளுக்கு தகவல் தெரிய வந்துள்ளது. உடனே அவர்கள் சிறுமியை பாபநாசம் அனைத்து மகளிர் போலீசுக்கு அழைத்து வந்து புகார் அளிக்க செய்து உள்ளனர். அந்த சிறுமியிடம் விசாரித்த போது மணி மாறன், ஜெயசுதன் ஆகியோர் தன்னிடம் முறைகேடாக நடந்து கொண்டனர் என்று தெரிவித்துள்ளார். மேலும் சுரேந்தர்பாண்டி யன், அய்யம்பேட்டை பகுதியைச் சேர்ந்த எம்.விஸ்வநாதன், ஆர்.ராக்கி என்ற ராகேஸ், ஆர்.ஆகாஷ், எம்.சண்முகம், புண்ணிய நல்லூர் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்ப வரின் மகன் அசோக் ஆகியோரும் தன்னி டம் தவறாக நடந்து கொண்டதாகத் தெரி வித்துள்ளார். இதையடுத்து பாபநாசம் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் உஷா மற்றும் காவல்துறையினர் மணிமாறன், ஜெயசுதன் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்ட னர். இதில் இருவரும் சிறுமியிடம் முறை கேடாக நடந்து கொண்டது தெரிய வந்தது. இதையடுத்து போக்சோவில் வழக்குப் பதிந்து மணிமாறன், ஜெயசுதனை கைது செய்தனர். மேலும் சுரேந்தர் பாண்டியன் உட்பட 5 பேரை போக்சோ வழக்கில் கைது செய்தனர்.