சுற்றுலா மேம்பாட்டிற்காக சிறப்புக் கூட்டம்
29 Nov 2025, 4:58 pm
<p><strong>சுற்றுலா மேம்பாட்டிற்காக சிறப்புக் கூட்டம்</strong></p>
<p>பொள்ளாச்சி, நவ.29- பொள்ளாச்சி வட்டாரத்தில் சுற்றுலாவை மேம்படுத்துவது குறித்து, பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை மற்றும் பொள்ளாச்சி ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் சிறப்புக் கூட்டம் வெள்ளியன்று நடைபெற்றது. பொள்ளாச்சி, மீன்கரை ரோடு, சக்தி ரிவர் ரிசார்டில் நடைபெற்ற கூட்டத்திற்கு, பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை தலைவர் இன்ஜினியர் ஏ.முத்துசாமி தலைமை ஏற்றார். ஹோட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் சி.எம்.காமராஜ் வரவேற்றார். இதில், மாவட்ட சுற்றுலா வளர்ச்சி அலுவலர் டி.ஜெகதீஸ்வரி, பொள்ளாச்சி நகராட்சி ஆணையாளர் என்.குமரன் ஆகியோர் பங்கேற்றனர். இதில், பொள்ளாச்சியில் பயணிகளின் வசதிக்காக ஒரு சுற்றுலா தகவல் மையம் அமைக்கப்பட வேண்டும். சுற்றுலா சார்ந்த தொழில் வர்த்தக நிறுவனங்களின் பதிவுகளை மேற்கொள்வதற்கான வழிமுறைகள் மற்றும் நடைமுறைகள் மேலும் எளிதாக்கப்பட வேண்டும். கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஆழியார் பூங்கா, கவியருவி, வால்பாறை டாப்சிலிப் உள்ளிட்ட இப்பகுதியின் முக்கியச் சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் மேம்படுத்தப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர். முடிவில், வர்த்தக சபை பொருளாளர் வி.பாலாஜி நன்றி கூறினார்.</p>
