கோவிந்தப்பேரியில் சிறப்பு கிராம சபை கூட்டம்
21 Jan 2026, 3:58 pm
<p><strong>கோவிந்தப்பேரியில் சிறப்பு கிராம சபை கூட்டம்</strong></p>
<p>தென்காசி, ஜன.21- தென்காசி மாவட்டம், கடையம் ஊராட்சி ஒன்றியம் கோவிந்தப்பேரி ஊராட்சி யில் ஜல் ஜீவன் இயக்கம் - ஜல் சேவா ஆங்கலன் - ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் வழங்கப்பட்ட கிராம குடிநீர் விநியோக கட்டமைப்புக ளின் மூலம் குடிநீர் விநியோ கம் பற்றிய விழிப்புணர்வு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த சிறப்பு கிராம சபை கூட்டத்திற்கு கோவிந்த ப்பேரி ஊராட்சி மன்றத் தலைவர் டி.கே.பாண்டியன் தலைமை தாங்கினார். கடையம் ஊராட்சி ஒன்றி யம் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மகா ராஜன் வருகை தந்தார். இந்த கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்ட மகளிர்க்கு குலுக்கல் முறையில் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. ஊராட்சி செயலர் பரமசிவன் நன்றி கூறினார்.</p>
