தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

போக்குவரத்து ஓய்வுபெற்ற ஊழியர்க்கு ரூ. 2,446 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு!

19 Feb 2026, 3:09 pm
போக்குவரத்து ஓய்வுபெற்ற ஊழியர்க்கு ரூ. 2,446 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு!
<p><strong>போக்குவரத்து ஓய்வுபெற்ற ஊழியர்க்கு ரூ. 2,446 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு!</strong></p> <p>சென்னை, பிப். 19 - தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, அவர்களுக்கு ரூ. 2 ஆயிரத்து 446 கோடியை ஒதுக்கீடு செய்து, மு.க. ஸ்டாலின் தலை மையிலான அரசு தீர்வு கண்டுள்ளது. மானியமாக தொகை &nbsp;ரூ. 9,639 கோடி விடுவிப்பு இடைக்கால பட்ஜெட்டில் போக்கு வரத்துத் துறை சார்ந்த பல்வேறு திட்டங்களுக்காக ரூ. 9,639 கோடி &nbsp;நிதியை தமிழக அரசு ஒதுக்கி யிருந்தது. டீசல் மானியம், மகளிர் விடியல் பயண மானியம், மாணவர் களுக்கான இலவசப் பயண மானி யம் மற்றும் அரசு பேருந்து சேவைக் கான ஊக்கத்தொகை ஆகிய வற்றுக்காக இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 6,867 ஊழியர்கள் பயனடைவார்கள் இதன் தொடர்ச்சியாக, போக்கு வரத்துக் கழகங்களில் பணியாற்றி &nbsp;ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் இருந்த பணப் பலன்களுக்கு ரூ. 2 ஆயிரத்து 446 கோடி சிறப்பு நிதியை ஒதுக்கீடு செய்து, வியாழனன்று (பிப். 19) அரசாணை வெளியிட்டுள்ளது. &nbsp;இதன்மூலம், 2024 ஏப்ரல் முதல் 2026 மார்ச் வரையிலான கால கட்டத்தில் ஓய்வுபெற்ற மற்றும் விருப்ப ஓய்வுபெற்ற சுமார் 6 ஆயிரத்து 867 &nbsp;ஊழியர்கள் நேரடியாக பயனடை வார்கள். வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை இந்த சிறப்பு நிதியின் மூலம் ஊழியர்களுக்கான வருங்கால வைப்பு நிதி, விடுப்பு ஒப்படைப்பு மற்றும் பணிக்கொடை உள்ளிட்ட நிலுவையில் உள்ள அனைத்து பணப் பலன்களும் விரைந்து வழங்கப்படும் என்று அரசுத் தரப்பில் அறிவிக்கப் பட்டுள்ளது. இந்தப் பணப்பலன்கள் அனைத்தும் எவ்வித தாமதமுமின்றி, நேரடியாக ஓய்வூதியதாரர்களின் வங்கிக் கணக்குகளில் விரைவில் வரவு வைக்கப்படும் என்றும் தெரி விக்கப்பட்டு உள்ளது. தொடர் போராட்டம் வெற்றி தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் மற்றும் ஓய்வு பெற்றோர் நல அமைப்பு ஆகியவை சார்பில் கடந்த ஆகஸ்ட் 18 முதல் தமிழகத்தின் 22 மையங்களில் 62 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தை நடத்தின. அப்போது சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேசி, &nbsp;வாக்குறுதிகளை அளித்திருந்த திமுக அரசு, அவற்றில் முக்கியமான கோரிக்கையை தற்போது நிறை வேற்றியுள்ளது. இது போக்குவரத்து தொழிலாளர் கள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தி யுள்ளது. சிஐடியு உள்ளிட்ட தொழிற் சங்கங்களும் வவேற்றுள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.