முந்தய பக்கம்

தமுஎகச மாநில மாநாட்டில் சிறப்பு கண்காட்சிகள் திறப்பு விழா!

5 Dec 2025, 4:21 pm
தமுஎகச மாநில மாநாட்டில் சிறப்பு கண்காட்சிகள் திறப்பு விழா!
<p><strong>தமுஎகச மாநில மாநாட்டில் சிறப்பு கண்காட்சிகள் திறப்பு விழா!</strong></p> <p>தஞ்சாவூர், டிச.5- தஞ்சாவூரில் நடைபெற்று வரும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கத்தின் (தமுஎகச) 16 ஆவது மாநில மாநாட்டையொட்டி, வெள்ளியன்று பல்வேறு &nbsp;தலைப்புகளில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு கண்காட்சிகள் பொதுமக்கள் பார்வைக்காகத் திறந்துவைக்கப்பட்டன. &nbsp;தமுஎகசவின் 50 ஆண்டு கால வரலாற்றை விளக்கும் கண்காட்சியை, சங்கத்தை நிறுவிய தலைவர்களில் ஒருவரும், மூத்த எழுத்தாளருமான எஸ்.ஏ.பெருமாள் &nbsp;திறந்து வைத்தார். &nbsp;* சிந்துவெளி நூற்றாண்டு கண்காட்சி: தஞ்சாவூர் &lsquo;பாம்பே ஸ்வீட்&rsquo; உரிமையாளர் சுப்பிரமணிய சர்மா &nbsp;திறந்து வைத்தார். &nbsp;* தஞ்சையின் புவிசார் குறியீட்டு பொருட்கள் கண்காட்சி: திரைப்படக் கலைஞர் துரை.சுதாகர் திறந்து வைத்தார். &nbsp;* பாரதி புத்தகாலய கண்காட்சி: &lsquo;பாரத் கல்வி குழுமச் செயலாளர்&rsquo; கல்வியாளர் புனிதா கணேசன் &nbsp;திறந்து வைத்தார். &nbsp;* நாட்டுப்புறக் கருவிகள் கண்காட்சி: தமிழ்ப் பண்பாட்டுத் துறை இணை இயக்குநர் (ஓய்வு) முனைவர் இரா.குணசேகரன் &nbsp;திறந்து வைத்தார். &nbsp;* எல்.ஐ.சி. கண்காட்சி அரங்கு: தஞ்சாவூர் கோட்ட முதுநிலை மேலாளர் விஷ்ணுதேவ் &nbsp;திறந்து வைத்தார். &nbsp;முன்னோடிகளுக்கு அஞ்சலி கண்காட்சி திறப்பு விழாவைத் தொடர்ந்து, மறைந்த தமுஎகச முன்னோடிகளுக்கு அனைவரும் மலரஞ்சலி செலுத்தினர். மாநாட்டில் திரளானோர் கலந்துகொண்டு கண்காட்சிகளை ஆர்வத்துடன் பார்வையிட்ட னர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram